Header Ads



பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற, அசிங்கமான சம்பவம்

பிரான்ஸ் நாட்டில் பண்ணைக்குள் புகுந்து குதிரைகளுடன் பல மாதங்களாக உல்லாசம் அனுபவித்து வந்த 2 வாலிபர்களை அப்பகுதி பெண்கள் நூதன திட்டத்தின் மூலம் பொலிசாரிடம் பிடித்து கொடுத்துள்ளனர்.

மேற்கு பிரான்ஸில் உள்ள Saint-Nazaire என்ற பகுதியில் குதிரை பண்ணை ஒன்று அமைந்துள்ளது. இதற்கு நடுத்தர வயதுடைய பெண் ஒருவர் உரிமையாளராக இருக்கிறார்.

பண்ணைக்கும் வீட்டிற்கும் சிறிது தூரம் என்பதால், குதிரைகளை பண்ணைக்குள் அடைத்து விட்டு வீட்டிற்கு சென்று விட்டு மறுநாள் வந்து குதிரைகளை பராமரித்து வந்துள்ளார்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன் பண்ணைக்குள் சென்றபோது, ‘யாரோ மர்ம நபர்கள் பண்ணைக்கு வந்துபோனதாக’ சந்தேகம் உரிமையாளருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை அன்று பண்ணை வாசலில் ஒரு ரகசிய கமெரா ஒன்றை பொருத்திவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.

மறுநாள் வந்து கமெராவை பார்த்தபோது, நள்ளிரவு நேரத்தில் 2 வாலிபர்கள் பண்ணைக்குள் அத்துமீறி நுழைந்து குதிரைகளுக்கு அருகில் சென்று வித்தியாசமான வேலைகளில் ஈடுபடுகின்றனர்.

ஆனால், அந்த காட்சிகள் கமெராவில் தெளிவாக பதிவாகததால், அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை சரியாக யூகிக்க முடியவில்லை.

கமெரா முயற்சியை கைவிட்ட உரிமையாளர் கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு அப்பகுதியில் உள்ள சில பெண்களை அழைத்துக்கொண்டு பண்ணைக்குள் ஒரு இருட்டான இடத்தில் ஒளிந்துக்கொண்டு இருந்துள்ளனர்.

இதனை அறியாத அந்த 2 வாலிபர்கள் பண்ணைக்குள் நுழைந்து குதிரைக்கு அருகில் சென்றுள்ளனர்.

பின்னர், அவர்கள் இருவரும் செய்த செயல் உரிமையாளரையும் மற்ற பெண்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

2 வாலிபர்களும் தங்களது காம உணர்வுகளை அங்குள்ள குதிரைகளுடன் தீர்த்துக்கொண்டு இருந்துள்ளனர். உடனே வெளியே வந்த பெண்கள் இருவரையும் சுற்றி வளைத்து கட்டிப்போட்டனர்.

பின்னர், பொலிசாருக்கு தகவல் அளித்ததும் ‘கடந்த 10 மாதங்களாக இந்த செயலில் ஈடுப்பட்டு வருவதாக’ இருவரும் ஒப்புக்கொண்டனர்.

பிரான்ஸ் நாட்டில் விலங்குகளுடன் உறவுக்கொள்வது என்பது கடந்த 2004ம் ஆண்டு முதல் சட்டவிரோதமானது. இந்த செயலில் ஈடுபடுபவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், 30,000 யூரோ அபராதமும் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. உலகில் வக்கிர புத்தியுள்ளவர்கள் இப்படி ஏதாவது செய்வது நடந்துகொண்டுதான் உள்ளது. ஆனால் Jaffanamuslimமிடம் வாசகர்கள் எதிர்பர்ப்பது இஸ்லாமிய வரையரைகளுக்குட்பட்ட விடயங்களையே. இவ்வாறான குப்பைகளை பதிவிடுவதை வேறு ஏதாவது இணையத்தளங்கள் செய்துகொள்ளட்டுமே.

    ReplyDelete

Powered by Blogger.