Header Ads



இலங்கைக்கு வந்த உலகின் மிகப்பெரிய, கப்பல் கப்டனின் அனுபவம் (படங்கள்)

இந்நாட்டின் சுற்றுலா துறை போக்குவரத்திற்கு அம்பாந்தோட்டை துறைமுகம் சிறந்த இடமென அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகைதந்த மிகப்பெரிய கப்பலான ரொட்டடம் கப்பலின் மாலுமியான மார்க்கோ கார்ஸ்ஜென்சன் குறிப்பிட்டார். அம்பாந்தோட்டை துறைமுகமானது தற்சமயம் பயணிகளின் மனங்களில் இடம்பிடித்துள்ளதெனவும் குறிப்பிட்டார்.

' ரொட்டடம் போன்ற மிகப்பெரிய அதிசொகுசு கப்பல்கள் பொருட்டு தற்சமயம் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தற்பொழுது வசதிகள் செய்யப்பட்டுள்ளன. எமக்கு இது மிகவும் நல்லதொரு அனுபவமாகும். அதேபோல் இத்துறைமுகமானது சுற்றுலா பயணிகளுக்கான சிறப்பான இடமாகும். இலங்கையின் தெற்கு பிரதேசம் தொடர்பான நல்லதொரு அனுபவத்தை பெற்றுக்கொள்ள விரும்பும் எந்தவொரு நபருக்கும் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு விஜயம் மேற்கொள்ளலாம். இத்துறைமுகத்திலிருந்து யால தேசிய பூங்காவிற்கு வெறுமனே 40 நிமிடங்களில் சென்றுவிடலாம். புத்தள மற்றும் கதிர்காமம் போன்ற இடங்களும் மிகவும் அண்மையில் உள்ளன. 

எனவே கொழும்பு மற்றும் அதற்கண்மையில் உள்ள பிரதேசங்களை ரசிப்பதை காட்டிலும் மேலதிக அனுபவங்களை பெற்றுக்கொள்ள விரும்பும் எந்தவொரு நபரும் அம்பாந்தோட்டைக்கு வருகைத்தருவதன் மூலமாக நல்லதொரு அனுபவத்தை பெற்றுக்கொள்ளலாம். அம்பாந்தோட்டைக்கு வருகை தருகின்ற பெரும்பாலானவர்கள் அருகாமையில் அமைந்துள்ள சுற்றுலா தளங்களிற்கு மிகவும் ஆர்வத்துடன் பயணிக்கின்றார்கள். விசேடமாக காட்டு விலங்குகளை காண்பதில் விசேட ஆர்வம் காட்டுகின்றார்கள். இவ்வாறான காரணங்களினால் இலங்கை தொடர்பாகவும் நல்லதொரு நிலைப்பாடும் மீண்டுமொருமுறை அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தருவதற்கான ஆர்வமும் ஏற்படுகின்றதென .....' இக்கப்பலின் மாலுமியான கார்ஜென்ஸ் அவர்கள் மேலும் குறிப்பிட்டார்.

இதுவரையில் அம்பாந்தோட்டைக்கு வருகைத்தந்துள்ள மிகப்பபெரிய மற்றும் அதிசொகுசு கப்பல் இன்று அதிகாலை துறைமுகத்தை விட்டுச் சென்றது. நெதர்லாந்திற்கு சொந்தமாகன இவ்வதி சொகுசு பயணிகள் கப்பலின் நீளம் 238 மீட்டர்களாகும். இக்கப்பலில் 600 செயற்பாட்டு குழுவினர் கடமையாற்றுகின்றார்கள். 

அமெரிக்க டொலர் 2 மில்லியன்கள் பெறுமதியான புராதன பொருட்கள் மற்றும் சித்திரங்கள் இக்கப்பலினுள் காணப்படுகின்றன. இக்கப்பலில் வருகைத்தந்த மொத்த பயணிகளின் அளவு 1176 ஆகும். இக்கப்பல் அடுத்தாக தல்லாவா (Thllawa) துறைமுகத்திற்கு பயணிக்கவுள்ளது. 90 நாட்கள் பயணத்தின் பின்னர் இக்கபலானது மீண்டும் நெதர்லாந்தை சென்றடையவுள்ளது. இப்பொழுது அம்பாந்தோட்டை துறைமுகத்தை நோக்கி புதிய கப்பல்கள் வருகை தருவுள்ளதாக ரொட்டடன் கப்பலின் உள்நாட்டு முகவரான மோல்சிப் சிலோன் லிமிட்டட் நிறுவணத்தின் பொது முகாமையாளரான சஹீட் மொஹீதின்  அவர்கள் குறிப்பிட்டார். சுற்றுலா பயணிகள் கப்பல்களின் வருகையை முன்னிட்டு அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அண்மித்த பகுதிகளை உயரிய தரத்தில் உள்ளதாகவும் தெரிவித்தார். சுற்றுலா துறையின் போக்குவரத்து செயற்பாடுகளின் பொருட்டு அம்பாந்தோட்டை துறைமுகத்தை உபயோகிக்குமாறு அனைத்து தரப்பினரையும் அழைத்தார்.





No comments

Powered by Blogger.