'வதந்தி பரப்பாதீர்கள்'
போலி எச்.ஐ.வீ அச்சம் காரணமாக பாடசாலை அனுமதி மறுக்கப்பட்ட மாணவன் போலி எச்.ஐ.வி அச்சம் காரணமாக மாணவர் ஒருவருக்கு பாடசாலை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
தாம் வசிக்கும் பிரதேசத்தில் உள்ள பாடசாலை மற்றும் அதனை அண்டிய பாடசாலைகளில் தமது பிள்ளைக்கு அனுமதி வழங்கப்படவில்லை என தாய் ஒருவர் போராட்டமொன்றில் ஈடுபட்டுள்ளார்.
குளியாப்பிட்டிய பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குளியாப்பிட்டி வலயக் கல்விப் பணிமனையின் எதிரில் குறித்த தாயும் மகனும் எதிர்ப்பு போராட்டமொன்றில் ஈடுபட்டுள்ளனர்.
குளியாப்பிட்டி கல்பொல போஹந்திய பிரதேசத்தைச் சேர்ந்த எம்.டி. சாந்தனி டி சொய்சா என்பவரின் மகன் ரொஹான் திலிசர டி சில்வா ஆகியோரே போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்தப் பிள்ளையின் தந்தை மூன்று மாதங்களுக்கு முன்னர் மரணித்தார். அவர் எயிட்ஸ் நோயினால் உயிரிழந்ததாக ஊரில் வதந்திகள் பரப்பியுள்ளதாக குறித்த பெண் தெரிவித்துள்ளார்.
எனது பிள்ளைக்கும் எயிட்ஸ் நோய் தொற்றியுள்ளதாகவும் இதனால் பாடசாலையில் அனுமதியளிக்க வேண்டாம் என அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.
எனது பிள்ளையை பாடசாலையில் சேர்த்தால் ஏனைய மாணவர்களை பாடசாலையிலிருந்து விலக்கிகொள்வதாக மாணவரின் பெற்றோர் அதிபருக்கு அழுத்தம் பிரயோகித்து வருகின்றனர்.
எனக்கோ, கணவருக்கோ அல்லது பிள்ளைக்கோ எச்.ஐ.வி நோய் தோற்று கிடையாது. எனது கணவர் சுவாசப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருந்தார்.
மருத்துவ பரிசோதனை அறிக்கைகளின் மூலம் எனது மகனுக்கு நோய்த் தொற்று எதுவும் கிடையாது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என குறித்த மாணவனின் தாய் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குறித்த மாணவருக்கு பாடசாலை ஒன்றை வழங்குமாறு கல்வி அமைச்சர் எழுத்து மூலம் குளியாப்பிட்டிய வலயக் கல்வி பணிமனைக்கு அறிவித்துள்ளார்.
Post a Comment