புனித கஃபாவை சூழ, நிழல் ஏற்படுத்த திட்டம்
புனித கஃபாவை சூழ வலம்வரும் (தவாப்) அல்லது தொழுகை செய்யும் யாத்திரிகர்களுக்கு சூரிய வெப்பத்தை மறைக்கும் வகையில் மத்அப் பகுதியில் நிழல் ஏற்படுத்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இது குறித்து ஆராய இரு புனித பள்ளிவாசல்களின் நிர்வாகத் தலைவர் ஷெய்க் அப்துல் ரஹ்மான், நிதி அமைச்சின் பிரதிநிதிகள் மற்றும் பெரிய பள்ளிவாசல் திட்டக் குழுவின் அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாக சவூதி அரேபிய செய்திகள் குறிப்பிட்டுள்ளன.
மஸ்ஜிதுன் நபவி பள்ளிவாசலில் குறிப்பாக கோடை காலத்தில் சுடும் வெயிலில் இருந்து பாதுகாக்க அமைப்பட்டிருக்கும் விரியும் குடை யாத்திரிகர்களுக்கு அதிக பயன்தரக் கூடியதாக இருப்பதாக கருதப்படுகிறது. அவ்வாறான ஒரு முறை குறித்தே பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.
மக்கா பெரிய பள்ளிவாசல் விரிவுபடுத்தும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, அதன்படி மத்அப் பகுதியும் விரிவுபடுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment