Header Ads



"தாடியுடன் முஸ்லிம் மாணவர் வரலாம், முஸ்லிம் மாணவிகள் தம் கலாசாரத்தை பேணலாம்" - பீடாதிபதி

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் தாடி வளர்த்தல் மற்றும் மாணவிகள் வெள்ளிக்கிழமைகளில் புடவை அணிதல் ஆகிய கட்டுப்பாடுகள் கட்டாயமாக்கப்படவில்லை எனவும் மாணவர்கள் விரும்பினால் மாத்திரம் அவற்றைப் பின்பற்றலாம் எனவும் யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கல்விசார் ஊழியர்களுக்கான ஆடைக் கட்டுப்பாடு, இன்று வெள்ளிக்க்கிழமை (26) முதல் நடைமுறைக்கு வருவதாக, கலைப் பீடாதிபதி பேராசிரியர் நா.ஞானகுமாரனை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகின. 

கல்விசார் ஊழியர்கள் மற்றும் மாணவர்கள், விரிவுரை மண்டபங்களுக்கு டெனிம் ஜீன்ஸ் மற்றும் டிசேட் அணிந்து வருவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. அத்துடன், தாடியுடன் விரிவுரைகளுக்கு வருவதும் தடை செய்யப்படுவதாகவும், மாணவிகள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் புடவை அணிந்து விரிவுரைகளுக்கு வரவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்ததுடன், இவை பேரவையில் எடுக்கப்பட்ட முடிவாகவும் கூறப்பட்டது. 

இந்நிலையில், பேரவையில் அவ்வாறு ஒரு முடிவு எடுக்கப்படவில்லையெனவும், இவ்வாறான ஆடைக்கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் கருத்து தெரிவித்தார். இது தொடர்பில் கலைப்பீடாதிபதியுடன் இன்று வெள்ளிக்கிழமை (26) Tm தொடர்புகொண்டு கேட்டபொழுது, 

'விதிமுறைகள் மாணவர்களை துன்புறுத்துவதாக இருக்கக்கூடாது. நாங்கள் கட்டாயமாக எந்த அறிவித்தலையும் விடவில்லை. இவ்வாறு இருந்தால் நன்றாக இருக்கும் என்று, பேரவையில் கூறினோம். 

அதிலும் தாடியுடன் மாணவர்கள் விரிவுரைகளுக்கு வருவது அவர்களின் தனிப்பட்ட விடயம். அதில் நாங்கள் தலையிடமுடியாது' என்றார். 'மாணவர்கள் அனைவரும் வசதி படைத்தவர்கள் என்றில்லை. நடைமுறைகளால் மாணவர்கள் துன்புறுத்தப்படக்கூடாது. ஆடைகள் தொடர்பில் பல்வேறுபட்ட விமர்சனங்கள் எழுந்துள்ளன. கட்டாயப்படுத்துவது எங்கள் நோக்கமில்லை. முஸ்லிம் மாணவிகள் தங்கள் கலாசாரத்தை பேணுவதை வரவேற்கின்றோம். மாணவர்களை நல்வழிப்படுத்தும் நோக்கில் கருத்துக்களை கூறினோம். அதனைச் சிந்திக்கக் கோரினோம். இந்த நடைமுறைகளை பேணுவதற்கு மாணவர்களும் ஆதரவு தெரிவித்திருந்தனர்' என்றார். 

4 comments:

  1. President and Priminister tryingto bring equality in the country, as their first step first time Sri Lankan anthem was in Tamil too in the independent day.
    BUT
    The person who started this issue, he is a BAFOON. He is tiring to create a problem in the countr again ,so he must be demoted from his post even he must be dismiss from his post.

    ReplyDelete
  2. President and Priminister tryingto bring equality in the country, as their first step first time Sri Lankan anthem was in Tamil too.
    BUT
    The person who started this issue, he is a BUFFOON.He is tiring to create a problem in the country, so he must be demoted from his post even he must be dismiss from his post.

    ReplyDelete
  3. போராட்டங்களும் கண்டனங்களும் இல்லாமல் சிங்களவர்கள் மத்தியில் வாழ்ந்துவிடலாம். ஆனால் இந்த தமிழ் தாளிபான்களோடு என்றும் முடியாது. இவர்கள் என்றுமே எம்மை எதிரியாக தான் பார்பார்கள். முஸ்லிம்களின் வளர்ச்சியில் பொறாமைகொள்ளும் இவர்கள் சுயமாக சாதிக்க வக்கில்லாமல் முஸ்லிம்களை ஒழித்துகட்ட கங்கணம் கட்டி அழையும் முதுகெழும்பற்ற கோழைகள்

    ReplyDelete
  4. "பிச்சை வேண்டாம் நாயைப்பிடி!" என்பது இதைத்தான்!

    ReplyDelete

Powered by Blogger.