பெளத்த சிங்கள தேசத்தை கட்டியெழுப்ப மகிந்த அழைப்பு, ஹுசைனையும் விமர்சிக்கிறார்
-ஆர்.யசி-
பெளத்த சிங்கள தேசம் ஒன்றை கட்டியெழுப்ப மக்கள் முன்வரவேண்டும் என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் ஆராய உலகில் மனித உரிமைகளை மீறியவர்கள் வருகை தந்திருப்பது வேடிக்கையாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
ஜனநாயகத்தை பலப்படுத்திய நாட்டில் மீண்டும் குழப்பம் விளைவிக்கவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் உள்ளிட்ட சர்வதேச பிரதிநிதிகள் வருகை தந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ நேற்று ஹோமாகம தம்மிக்க விகாரையில் நடைபெற்ற மத வழிபாடுகளின் பின்னர் பெளத்த மதத் தலைவர்களை சந்தித்திருந்தார். அதன் பின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
நாட்டின் பாதை மாறியுள்ளது, நாட்டின் சுயாதீன செயற்பாடுகளில் சர்வதேசத்தின் நேரடித் தலையீடு ஏற்படும் நிலைமை உருவாகியுள்ளது. எமது சட்டதிட்டங்களை ஏனையோர் திருத்தி அவர்களுக்கு தேவையான வகையில் மாற்றியமைக்கும் நிலைமை உருவாகியுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் இந்த நாட்டை ஆசியாவின் பலமானதும் சுயாதீனமானதுமான நாடாக மாற்றிக் கொடுத்தேன்.
எனது ஆட்சியில் அனைத்து செயற்பாடுகளிலும் உள்ளக செயற்பாடுகளுக்கு முன்னுரிமை வழங்கி சர்வதேசத்தின் அத்துமீறிய செயற்பாடுகளை கட்டுப்படுத்தினேன். ஆனால் இன்று நிலைமைகள் முழுமையாக தலைகீழாக மாறியுள்ளன. சர்வதேசத்தின் முழுமையான ஆதிக்கத்தை செலுத்த ஆரம்பித்துள்ளனர்.
இன்று இலங்கை மீது தொடர்ச்சியான சர்வதேச பிரதிநிதிகளின் ஆக்கிரமிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாம் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து நாட்டில் அமைதியை பலப்படுத்தியவர்கள். எமது அரசாங்கம் மனிதாபிமானமாக சிந்தித்த காரணத்தினால் தான் மூவின மக்களையும் காப்பாற்றி இன்று அமைதியான நாட்டை புதிய அரசுக்கு ஒப்படைக்க முடிந்துள்ளது.
ஆனால் சர்வதேச மட்டத்தில் மனித உரிமைகளை மீறியவர்கள் இன்று எமது மனித உரிமைகளை பற்றி ஆராய வந்துள்ளமை வேடிக்கையாக உள்ளது.
மேலும் இன்று இந்த அரசியல் பாதை மக்களினால் போடப்பட்டது அல்ல. இது சர்வதேச தீய சக்திகளினாலும், ஐக்கிய தேசியக் கட்சி,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளின் கூட்டு முயற்சியாலுமே உருவானது.
இவர்கள் அனைவரும் சர்வதேச பிரிவினைவாதிகளின் நம்பிக்கையை வென்றவர்கள் என்பது நன்றாகவே தெரியும். ஆகவே இப்போதும் சிங்க பெளத்த மக்கள் தமது நாட்டை வென்றெடுக்கவும் இத்தனை காலம் கட்டிக்காத்த எமது பாரம்பரியத்தை தொடர்ந்தும் தக்கவைக்கும் வகையில் செயற்பட வேண்டும் என்றார்.
Neengal Appachi ithai urathu saththamiddu sollungo.Appachchi,Eelam varuvathatku maraimugamaga uthavi puriveergal.Piraba thevai illai.
ReplyDeleteinnum pala carlton palce katalam
ReplyDeleteஐயாவையும் வெலிக்கட பக்கம் கூட்டி சென்றுவிட்டால் நாட்டின் ஆகவேண்டிய வேலைகளை கவனிக்கலாம்.
ReplyDeleteஇப்போது மட்டும் இலங்கை முஸ்லிம் நாடாகவா இருக்கிறது
ReplyDelete