கல்கமுவ முஸ்லிம் மத்திய, கல்லூரியின் நூற்றாண்டு விழா
நவீன காலத்தின் சவால்களை நாம் தைரியமான எதிர் கொள்ள வேண்டுமானால் கல்வியில் எமது சமுதாயம் கட்டாயமாக அதிகம் கரிசனை காட்ட வேண்டும். அதுவே எம்முடைய முஸ்லிம் சமுதாயத்தின் எழுச்சிக்கு வழிகோலும் என்பதை நாங்கள் மறந்து விட முடியாது. இன்றைய நல்லாட்சி அரசாங்கம் வரலாற்றில் எப்போதும் இல்லாதவாறு கல்விக்காக இம்முறை 5.8 பில்லின் ரூபா நிதி ஒதுக்கீடு செய்துள்ளமைப் பார்க்கின்றோம். கல்விக்காக இவ்வளவு பெரிய தொகை நிதி ஒதுக்கீடு செய்துள்ளது பற்றி நாம் விசேடமாக சிந்திக்க வேண்டும். எமது நாடு தலைசிறந்த கல்வி வளமிக்க நாடாக மாற்ற வேண்டும் என்ற அடிப்படையிலேயே பாரியதொரு தொகையை புதிய அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த பெருந்தொகையான நிதியிலிருந்து சகல பாடசாலையை அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. அந்த வகையில் கண்டி மாவட்டத்தில் பெரும் குறைபாடுகள் காணப்படும் பாடசாலைகளை அபிவிருத்தி செய்யவுள்ளோம் என்று முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தெரிவித்தார்.
கல்கமுவ முஸ்லிம் மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழா பாடசாசாலை அதிபர் டி. எம். எஸ். மஹ்பூப் தலைமையில் பாடசாலை மைதானத்தில் 07-02-2016 நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் அங்கு இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.
மறைந்த அமைச்சர் ஏ. ஸீ. எஸ் ஹமீத் அவர்களை அதிகம் நேசித்த பகுதியாக கண்யிலுள்ள கெலிஓய கல்கமுவ ஊர் அமைந்துள்ளது. எல்லாத் தேர்தல் காலங்களிலும் இந்த ஊர் மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கி வந்துள்ளார்கள். இவை எல்லாவற்றைவிடவும் என்னுடைய தந்தையின் குடும்பங்கள் அதிகம் உள்ள பகுதியாக இந்த ஊர் அமைந்துள்ளது. அந்த வகையில் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் இந்தப் பாடசாலையில் கலந்து கொள்வதில் நான் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.
ஒரு பாடசாலை 100 வருடங்களை கடந்து சென்றுள்ளதெனில் இந்தப் பாடசாலையிலிருந்து கணிசமாளவு கல்வியாளர்களையும் புத்திஜீவகளையும் திறன் வாய்ந்தவர்களை உருவாக்கிய வரலாற்றுப் பாராம்பரியங்களைக் கொண்ட பாடசாலையாகவே அமைந்துள்ளன. ஒரு பாடசாலை 100 வயதை எட்டும் போது அது அந்த ஊருக்கு பெரும் சாதனையாகவே இருக்கும் என்று கூறுவதிலே இங்கு இரண்டு கருத்துக்களுக்கு இடமில்லை
கண்டி மாவட்டத்தில் நூற்ண்டு விழாகள் கொண்டாடும் பாடசாலைகள் எடுத்துக் கொள்வோமாயின் சுமார் பத்துக்கும் குறைவான பாடசாலைகளே உள்ளன. கண்டி சித்திலெப்பை . நான் படித்த அக்குரணை அஸ்ஹர் கல்லூரி உள்ளிட்ட பாடசாலைகள் விரட் எண்ணக் கூடிய ஒரு சில பாடசாலைகளே இங்கு உள்ளன. எனவே இந்தப் பாடசாலை நூறு வருடம் பூர்த்தி செய்தமை என்பது பெரியதொரு சாதனையாகும்.
முஸ்லிம்களுடைய ஆரம்ப கல்வி வீட்டுத் திண்ணையிலேயே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அப்பொழுது வீட்டுத் திண்ணையிலேயே குர்ஆனை ஓதிக் கொடுக்கப்பட்டது. அந்த வகையிலே திண்ணைப் பள்ளியாக ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பாடசாலை ஒரு 100 வருடங்களை பூர்த்தி செய்வது ஒரு பெரிய சாதனை என்றே அழைக்கின்றேன். அதிபர் ஆசிரியர்கள் நலன்விரும்பிகள் பெற்றோர்கள் ஆகியோருடைய பங்களிப்பின் காரணமாக இந்தப் பாடசாலை துரிதமான வளாச்சியைக் கண்டு உள்ளன. இதனைப் போலவே இந்த ஊரும் ஒரு நீண்ட சரித்திரத்தைக் கொண்ட பிரதேசமாகும்.
மலைப் பாங்கான பகுதியில் ஆற்றங்கரை யோரத்தில் இந்தக்கிராமம் அமைந்துள்ளது. பாக்கிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமான நெல்லம்மை தேயிலை தோட்டத்தம் அமைந்திருந்தது. அவரிடமிருந்து 150 ஏக்கர் தேயிலைத் தோட்டத்தை அரசாங்கம் சுவீகரித்து குடியேற்றப்பப்பட்ட கிராமே இதுவாகும்.
கல்கமுவ மற்றும் நியு எல்பிட்டி ஆகிய இரு கிராமங்களையும் கட்டி எழுப்புவதற்காக அன்று இருந்த அரசியல்வாதி முதல் இன்று வரையுள்ள அரசியலவாதிகள் பாரிய பங்களிப்பைச் செய்துள்ளார்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் முன்னாள் பிரதமர் தி. மு ஜயரத்தன, மத்திய மாகாண முஸ்லிம் கல்விப் பரிவுக்கான கல்விப் பணிப்பாளர் நசார், அரசியல் பிரமுகர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பாடசாலை ஆசிரியர்கள். மாணவர்கள், சாதனையாளர்கள் உள்ளிட்ட பலர் கௌரவிக்கப்பட்டனர்.
இக்பால் அலி
Post a Comment