Header Ads



"மஹிந்தவின் காலத்தில் மோசடியில் செய்தவர்களுக்கு, நல்லாட்சி அரசு தண்டனை வழங்காது"

புதிய அரசியல் கட்சி தொடர்பில் கூட்டு எதிர்க்கட்சிக்குள் கருத்து முரண்பாடு நிலவி வருவதாக ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மொனராகலில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அங்கு தொடர்ந்து கருத்துரைத்த அவர்,

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் தலைமையில் இந்தக் கட்சி அமைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

எனினும் அண்மைய நாட்களாக இந்த புதிய அரசியல் கட்சி தொடர்பில் கூட்டு எதிர்க்கட்சிக்குள் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, மஹிந்த ராஜபக்ச ஆட்சி காலத்தில் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு நல்லாட்சி அரசாங்கம் உகந்த தண்டனை விதிக்கும் என எதிர்பார்க்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் பொருளாதாரம் கட்டியெழுப்பப்பட வேண்டுமாயின் அனைத்த பிரதேசங்களுக்கும் அபிவிருத்தி நீரோட்டம் செல்ல வேண்டும் என ஜே.வி.பியின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments

Powered by Blogger.