Header Ads



நவீன ஹிட்லர்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் டொனால்டு டிரம்பின் செய்கைகள் தமக்கு ஹிட்லரை நினைவுபடுத்துவதாக முன்னாள் மெக்சிகோ ஜனாதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

மெக்சிகோ குறித்தும் அதன் குடிமக்கள் குறித்தும் அமெரிக்க குடியரசு கட்சியின் டொனால்டு டிரம்ப் தெரிவித்திருந்த கரித்துக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்த வின்சென்டி பாக்ஸ்,

அவரது செகைகள் மற்றும் பேச்சுக்கள் தமக்கு ஹிட்லரை நினை படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க தேசத்தை டிரம்ப் பின்னோக்கி இட்டுச்சென்று கலவரம் நிறைந்த, யுத்தம் சூழ்ந்த பகுதியாக மாற்ற நினைக்கிறார் என்றார்.

மெக்சிகோ அமெரிக்கா இடையே சுவரொன்று எழுப்ப அந்த நாடு உதவ வேண்டும் என டொனால்டு டிரம்ப் தெரிவித்திருந்த கருத்துக்கு,

கடுமையாக தமது எதிர்ப்பை தெரிவித்த வின்செண்டி, அப்படி ஒரு சுவரை எழுப்ப கண்டிப்பாக தம்மால் உதவ முடியாது என்றார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில், மெக்சிகோ நாட்டினரால் மட்டுமே அமெரிக்காவில் அதிக தொல்லைகள் ஏற்படுகிறது என்றார்.

அமெரிக்க நாட்டினுள் போதை மருந்தை மட்டுமல்ல குற்றச்செயல்களையும் அவர்களே இங்கு அறிமுகப்படுத்துவதாகவும் தெரிவித்திருந்தார்.

டிரம்ப் தெரிவித்திருந்த இந்த கருத்திற்கு பல மட்டத்தில் இருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்தது,

வின்செண்டி போன்று பல தலைவர்களும், அவரது பேச்சு சர்வாதிகாரி போன்று இருப்பதாகவும் தெரிவித்திருந்தனர்.

No comments

Powered by Blogger.