Header Ads



யோசிதவை பார்த்த பிரதியமைச்சர்கள், மைத்திரியிடம் நிபந்தனை - பதவிகளை துறப்பதாக மிரட்டல்

நிதி மோசடி விசாரணைப் பிரிவினை கலைக்குமாறு சில பிரதி அமைசர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கத் தீர்மானித்துள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதி அமைச்சர்களே இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுக்க உள்ளனர்.

சில பிரதி அமைச்சர்கள் யோசித ராஜபக்ஸவை பார்வையிடுவதற்காக இன்றைய தினம் வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நிதி மோசடி விசாரணைப் பிரிவினை கலைக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்க உள்ளதாகவும் அது சட்டவிரோதமானது எனவும் பிரதி அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

நிதி மோசடி விசாரணைப் பிரிவு கலைக்கப்படாவிட்டால் பிரதி அமைச்சர் பதவிகளை துறக்கப் போவதாக கோரிக்கை விடுக்க உள்ளதாக ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.

நிமால் லன்சா, சுமேதா ஜயசேன, அனுராத ஜயரட்ன, நிசாந்த முத்துஹெட்டிகம, சுசந்த புஞ்சிநிலமே ஆகியோரே யோசிதவை பார்வையிடச் சென்றுள்ளனர்.

3 comments:

  1. Now we can see how Yaha Palanaya responds.

    ReplyDelete
  2. நாட்டுப்பற்றுள்ளவர்கள்.இதத்தான் சொல்வதோ எருமை மாட்டை computer collage சேர்ப்பது என்று அப்பா ஏன் பார்லிமண்டில் சேர்த்துவிட்டார்கள் ஆ அங்க படிச்சுட்டுதான் இங்கு வந்திருப்பார்களோ,இந்த தேசப்பற்றாளர்கள்.

    ReplyDelete

Powered by Blogger.