"வடகொரிய ஜனாதிபதியை, உடனடியாக கொல்ல வேண்டும்"
உலக மக்களை காப்பாற்றும் நோக்கத்தில் வட கொரிய ஜனாதிபதியான கிம் யோங்-அன்னை உடனடியாக கொல்ல உத்தரவிட வேண்டும் என தென் கொரிய ஜனாதிபதிக்கு எம்.பி ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென் கொரிய நாட்டை சேர்ந்த ரேடியோ நிகழ்ச்சி ஒன்றில் அந்நாட்டு ஆளும் கட்சியை சேர்ந்த Ha Tae-keung என்ற நாடாளுமன்ற உறுப்பினர் இன்று பங்கேற்றுள்ளார்.
அப்போது அவர் பேசியபோது, ‘உலக மக்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால், வடகொரிய ஜனாதிபதியான கிம் யோங்-அன்னை உடனடியாக கொல்ல வேண்டும்.
இதற்கு தென் கொரிய ஜனாதிபதி உத்தரவு இடுவதுடன், அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் ஆதரவை பெற்று இதனை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
அதாவது, ஈராக் ஜனாதிபதியான சதாம் உசேனை தூக்கிலிட்டு கொன்றது போல வட கொரிய ஜனாதிபதியையும் கொல்ல வேண்டும்.
கிம் யோங்-அன் ஒரு குற்றவாளி. ஒரு குற்றவாளியை கொல்வது என்பது சர்வதேச சட்டங்களை மீறுவதாக கருதப்படாது.
எனவே, உலகத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் கிம் யோங்-அன்னை உடனடியாக கொல்ல தென் கொரிய ஜனாதிபதியான Park Geun-hye உத்தரவிட வேண்டும் என அவர் பரபரப்பாக பேட்டி அளித்துள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் முதல் ஐ.நா சபையின் எதிர்ப்பை மீறி அணு ஆயுத சோதனைகளை வட கொரியா நடத்தி வருவதை தடுக்கவே Ha Tae-keung இந்த பரபரப்பான பேட்டியை அளித்துள்ளார்.
எனினும், இந்த செய்தி தொடர்பாக வட கொரியா அரசு இதுவரை எந்த பதிலும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment