Header Ads



யாழ் பல்கலைக்கழகத்தில் தாடிக்கு கட்டுப்பாடு - தர்மலிங்கம் கலையரசனின் பார்வை இதோ..!

-Tharmalingam Kalaiyarasan-

மன்னிக்கவும், 

இந்த அறிவித்தல் வெளியானது, ஆப்கானிஸ்தானிலோ அல்லது ISIS கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலோ அல்ல. யாழ்ப்பாண பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் இவை. "இதெல்லாம் தமிழ்க் கலாச்சாரமா? இந்துக் கலாச்சாரமா? அல்லது ஆங்கிலேயக் கலாச்சாரமா?" என்று ஒரு எழவும் புரியவில்லை. தெரிந்தவர்கள் கொஞ்சம் விளக்கவும்:

1. மாணவர்கள் தாடி வைத்திருக்கத் தடை. ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் கட்டாயம் தாடி வைத்திருக்க வேண்டும் என்று அறிவித்ததற்கும், இதற்கும் இடையில் என்ன வித்தியாசம்? இந்தக் கட்டுப்பாடு, முஸ்லிம் மாணவர்கள் மீது பாகுபாடு காட்டுவதற்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம்? தாடி வைப்பது தமிழர் கலாச்சாரமாக இருந்திருக்கிறது. திருவள்ளுவரும், தமிழ்ப் புலவர்களும் தாடி வைத்திருந்திருக்கிறார்கள்.

2. டி - சேர்ட், டெனிம் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாது. அதே நேரத்தில், தமிழரின் கலாச்சாரப் படி, வேஷ்டி கட்டி, சால்வை அணிந்து வர வேண்டும் என்று ஏன் அறிவிக்கவில்லை? சேர்ட், காற்சட்டை அணிவது எந்த நாட்டுக் கலாச்சாரம்?

டெனிம் ஜீன்ஸ், ஒரு காலத்தில் தொழிலாளர்களால் மட்டுமே அணியப் பட்டது. தற்போது அந்த ஆடையை அனைவரும் அணிவதால், மேலெழுந்தவாரியாக வர்க்க சமத்துவம் பேணப் படுகின்றது. இதற்கு மாறாக கனவான்கள் உடுத்தும் காற்சட்டையை பல்கலைக் கழகம் அங்கீகரிக்கிறதா?
அல்ஜீரியாவில், GIA என்ற இஸ்லாமிய மத அடிப்படைவாத இயக்கம், ஆயுதப்போராட்டம் நடத்திய காலங்களில், ஜீன்ஸ் அணிவதற்கு தடைவிதித்தார்கள். அல்ஜீரியாவில் ஜீன்ஸ் அணிந்திருந்த காரணத்தாலேயே பலர் சுட்டுக் கொல்லப் பட்டனர். ஜீன்ஸ் விடயத்தில், யாழ் பல்கலைக்கழக அறிவித்தலுக்கும், இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளின் அறிவித்தலுக்கும் இடையில் என்ன வித்தியாசம்?

3. மாணவிகள் சேலை கட்ட வேண்டும். ஆங்கிலேய காலனிய காலத்தில், காஞ்சிபுரம் புடவை நிறுவனங்களின் உற்பத்தி அதிகரித்த பின்னர் தான், அனைத்துப் பெண்களும் சேலை கட்ட ஆரம்பித்தார்கள். ஐரோப்பியர்கள் வருவதற்கு முன்னர், இலங்கையில் வாழ்ந்த பெண்கள் சேலை உடுத்தியதற்கான எந்த ஆதாரமும் இல்லை.

பொதுவாக முஸ்லிம் நாடுகள் பற்றி தமிழர்கள் கொண்டுள்ள தப்பெண்ணம் பற்றி இங்கே குறிப்பிடத் தேவையில்லை. இருப்பினும், அண்மையில், கெய்ரோ மருத்துவக் கல்லூரி, மாணவிகள், ஊழியர்கள் நிகாப் அணிவதற்கு தடைவிதித்திருந்தது. நூறாண்டு காலமாக, துருக்கி பல்கலைக்கழகங்களில் முக்காடு அணிவதற்கு விதித்த தடைச் சட்டம் இன்னமும் அமுலில் உள்ளது. ஆனால், யாழ்ப்பாண பல்கலைக்கழகம் தாலிபான் பாணியில் பழமைவாத சம்பிரதாயங்களை பின்பற்றத் தொடங்கியுள்ளது.

14 comments:

  1. Utter stupid article. These rules are to maintain discipline and nothing to do with religion or culture.

    ReplyDelete
  2. Kumar. You can't force adult to what wear. They are all matured and university staff / students not secondary school students. Why do you want wear saree? Its Indian dress.

    ReplyDelete
  3. @Nowfara: I didn't say anything about saree or any particular dress. But it should be formal. However saree is officially accepted dress for women in Sri Lanka

    ReplyDelete
  4. முட்டாள்த்தனமான செய்தி கலையரசனுக்கு தான் என்ன சொல்கிறேன் என்பதிலேயே தெளிவில்லை

    ReplyDelete
  5. இவ்வாறான இனத்துவேசம் உள்ளவர்களோடு எவ்வாறு சமரசம் பேசி வடக்கையும் கிழக்கையும் ஒரு மாகாணமாக சேர்த்து முஸ்லிம்களும் சேர்ந்து வாழ்வது இவர்களின் அடி மனதில் இன்னும் அந்த இனவாதக்கொள்கை குடி கொண்டே உள்ளது.பாடசாலைகளில் மாணவர்களை கட்டுப்படுத்த சில முயற்சிகளை எடுத்தார்கள் கை கூடவில்லை இப்போது பல்கலைகலகம் வரை வந்து தங்களின் துவேசத்தை ஆரம்பிக்கிறார்கள்.இதுவல்லாம் முஸ்லிம் தலைவர்களின் மண்டையில் ஏற வேண்டும்.அரசியல் யாப்பு திருத்தச்சட்டத்தில் மிககவனமாக இருக்க வேண்டும்.சின்ன விடயம் என்று எதையும் விட்டுக்கொடுக்க் வேண்டிய அவசியம் இல்லை.இவர்களுக்கிடையில் எந்த நல்லிணக்கத்துக்கும் போகவேண்டிய அவசியம் இல்லை.இவர்கள் மதில் குரோதத்தன்மையை வைத்துக்கொண்டுதான் எல்லா விடயத்திலும் காய் நகர்த்துகிறார்கள்.

    ReplyDelete
  6. தர்மலிங்கம் கலையரசன் தான் என்ன எழுதுகின்றேன் என்று சுய புத்தியுடன்தான் எழுதுகிறாரா?

    இஸ்லாம் என்றால் என்ன என்று அவருக்கு தெரியுமா?

    இஸ்லாமிய சட்டங்களை இழிவு செய்யவே தேவையில்லாத உதாரணம் கொண்டுவரப்பட்டது. முஸ்லிம் மாணவிகள் சாரி அணியவும் முடியாது, முஸ்லிம் மாணவர்களை தாடியை வலிக்கும் படி சொல்லவும் முடியாது. அல்லாஹ்வின் சட்டங்களை மாற்ற யாருக்கும் உரிமை இல்லை.

    இந்த சட்டங்களை ISIS செய்தாலும், ஆப்கானிஸ்தானில் செய்தாலும், அல்லாஹ்வின் சட்டங்கள் உன்னதமானவை. செய்பவர்கள் மீது அல்லாஹ்வின் அருள் இறங்கும்.

    ReplyDelete
  7. தாடியுடன் வரக்கூடாது என்பதும் வெள்ளியன்று சேலைதான் அணிய வேண்டும் என்பதும் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு. குறித்த பீடாதிபதியின் உளநலம் உடனடியாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

    ReplyDelete
  8. Kattayam.saree.katti.poka.vendum.ethu.enkal.tamil.and.singalish.cultre .dont.play.oure.cultre

    ReplyDelete
  9. Sritharan Sri, இதை விட இனவாதம் செய்த பிரபாகரனுக்கும், அந்த இயக்கத்திற்கும் முள்ளிவைக்காலில் நடந்தது உங்களைப் போன்றவர்களுக்கு நல்ல பாடமாக இருக்கட்டும்.

    ReplyDelete
  10. பல்கலைக்கழகத்தில திருவள்ளுவரின் உருவத்திலும் தாடியை வெட்டினால் சரி. நல்ல நேரம் LTTE is no more.

    ReplyDelete
  11. யாழ்ப்பாண பல்கலைக்கழகம் தமிழ் சிங்கள மக்களுக்கு மட்டுமல்ல இலங்கையில் வாழும் அனைத்து இனமக்களுக்கும் சொந்தமான அரசாங்கத்தின் பொது சொத்து அதை தனியாக யாரும்உரிமை கொண்டாட முடியாது

    ReplyDelete
  12. Kumar, ur statement is supportive to this article that means u r considering those rules/restrictions as a discipline but I think still u did not understand what the discipline means that not heart/insult any one in any case. Also u should remember that people who with beard are the ones are being roles modes in the hear and world.

    ReplyDelete
  13. Never ever Beleive these north terrorist. ..they never ever change.they like venomus snakes.

    ReplyDelete

Powered by Blogger.