எனக்கும் சித்தப்பா பசிலுக்கும், முரண்பாடுகள் உள்ளன - நாமல்
இலங்கையில் நல்லாட்சி அரசாங்கத்துக்கு பின்னர் வெளியக சக்திகள் இருந்து செயற்படுவதாக சந்தேகம் எழுகின்றது.
இதன் அடிப்படையிலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை கொலை செய்ய முயன்ற விடுதலைப்புலிகளை கூட விடுதலை செய்ய அரசாங்கம் துணிந்துள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்தநிலையில் நாட்டை விடுவித்த படையினரை அரசாங்கம் வேறுவிதமாக நடத்துவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆங்கில செய்தித்தாள் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அபிவிருத்தியை நோக்காகக் கொண்டே மக்கள் அரசாங்கத்துக்கு வாக்களித்தனர்.
எனினும் இன்று அபிவிருத்திகள் தேக்கநிலையை அடைந்துள்ளன. இதனை மறைப்பதற்காகவே அரசாங்கம் அரசியல் பழிவாங்கல்களை முன்னெடுத்து வருவதாக நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேவேளை அரசியலில் தமக்கும் சித்தப்பா பசில் ராஜபக்சவுக்கும் முரண்பாடுகள் உள்ளபோதும் தமக்குள் வேறு பிரச்சினைகள் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
உங்கள் ஆட்சியின் போது இடம் பெற்றதாகக் கூறப்படும் முறையற்ற செயல்கள் தொடர்பாக விசாரணைகள் செய்வதும் கம்பி எண்ண வைப்பதும் அரசியல் பழிவாங்களா?
ReplyDeleteஅன்புள்ள சித்தப்பா உங்க அரசியல் வாழ்வை கேட்டால் தப்பா?அப்பப்பா..பொல்லாத நாமலப்பா..ம்..உங்களோடது அப்பா கொடுத்த பதவிதானே?..அப்பாவை நீங்கள் பார்த்தது எப்போது?யுத்த வெற்றியில் ஊடகங்களுக்கு பேட்டிகொடுத்த அந்த அழகான நாள் ..கடந்த அரசியலையும் இந்த அரசியலையும் மறக்கமுடியாது மகனே......
ReplyDelete