"ஹஜ் சட்ட ஒழுங்குகள், கடுமையாகப் பேணப்படும்"
எதிர் வரும் காலங்களில் இலங்கையிலிருந்து செல்லும் ஹஜ் யாத்திரையாளர்கள் புனித ஹஜ் யாத்திரையை எவ்வகையான சிரமங்களின்றி மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் உம்ரா பயண யாத்திரைகளின் போது தற்போது பொது மக்கள் சிரமங்கள் எதிர் நோக்கு வருகின்றார்கள் எனவும் இதற்கான சட்ட ஒழுங்குகள் கடுமையாகப் பேணப்படும் எனவும் வேண்டும் எனவும் ஹஜ் குழுச் செயற்பாட்டாளர் முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சரின் அந்தரங்கச் செயலாளர் எம். எச். ஏ. பாஹிம் தெரிவித்தார்
முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் அமைச்சின் கீழ் இயங்கும் ஹஜ் குழுவின் ஏற்பாட்டில் ஹஜ் மற்றும் உம்ரா முகவர்களுக்கான ஒன்று கூடல் ஒன்று அமைச்சின் கேட்போர் கூடத்தில் 23-02-2016 நேற்று நடைபெற்றது.
ஹஜ் குழுவின் தலைவர் கலாநிதி சியாட் தாஹா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் போது இங்கு அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சரின் அந்தரங்கச் செயலாளர் எம். எச். ஏ. பாஹிம், ஹஜ் குழு உறுப்பினர்களான சுகாதார அமைச்சின் மேலதிகச் செயலாளர் வை. எல். எம். நவவி, முஸ்லிம் சமயம் கலாசாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ். எச். எம் சமீல் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
Post a Comment