Header Ads



மைத்திரி மீது குற்றச்சாட்டு (வீடியோ)

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவு குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே பொறுப்பேற்க வேண்டும் என்று கூட்டு எதிர்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்ஸா இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

இந்தநிலையில், சுதந்திர கட்சியில் மேலும் பிளவு ஏற்படுமாக இருந்தால் அதற்கான பொறுப்பை ஜனாதிபதியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஆதரவான உறுப்பினர்கள் சுதந்திர கட்சியில் இருந்து பிரிந்து செல்வதற்கு எத்தணிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸவும் இவ்வாறான கருத்தை அண்மையில் முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. அவர் சொல்றத கேட்கிறது யாரு எல்லாம் கள்ளர் கூட்டம். அகப்படமுன் தப்பிக்கா முயற்சி

    ReplyDelete
  2. கட்சியை உடைத்தாலும் (கைதாகும்) காட்சிகளுக்கு பஞ்சமில்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்!

    ReplyDelete

Powered by Blogger.