"விஷம் வாங்கக்கூட பணம் இல்லாதபோது, கட்டப்பட்ட தாஜ்மகாலை இடித்துத்தள்ள வேண்டும்"
தாஜ்மகாலை இடித்து தள்ள வேண்டும் என சமாஜ்வாடி கட்சி தலைவர்களில் ஒருவரும் அமைச்சருமான அசம்கான் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கல்லூரி பட்டமளிப்பு விழா ஒன்றில் இதுகுறித்து அவர் பேசுகையில், தாஜ்மகால் தற்போது உலகின் அபூர்வ நினைவுச் சின்னமாக இருந்து வருகிறது.
ஆனால், மக்கள் விஷம் வாங்கக்கூட பணம் இல்லாமல் இருந்த காலத்தில், அரசு பணத்தை முற்றிலும் தவறாக பயன்படுத்தி, மும்தாஜுக்காக வெள்ளை சலவைக்கற்களால் கட்டப்பட்டது.
அடிமை சின்னம் ஒன்றை இடித்து தள்ள வேண்டும் என்றால், முதலாவதாக தாஜ்மகாலை இடித்து தள்ள வேண்டும்.
அதன்பின்னர் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட ஜனாதிபதி மாளிகை மற்றும் நாடாளுமன்றத்தையும் இடிக்க வேண்டும்.
தாஜ்மகாலை இடித்து தள்ள முடிவெடுக்கப்பட்டால், அதை தலைமையேற்று நடத்துவதில் தாம் முதலில் நிற்பதாக அவர் பேசியுள்ளார்.
சமாஜ்வாடி கட்சி தலைவரின் இந்த பேச்சால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
வரவேற்கத்தக்க விடயம் அதிகமாக அனாசாரம் குறையும்
ReplyDeleteமூளைக்கோளாறுள்ளவர்கள் அசம்கான் போன்ற இந்திய அமைச்சர்களாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை. இந்தச் செய்திக்கு முதலாவது பின்னூட்டத்தை இட்டிருக்கும் முஸ்தபா ஜாஃபராகவும் இருக்கமுடியும்!
ReplyDeleteயார் என்ன சொன்னாலும் சிலர் கண்டுகொள்ள மாட்டார்கள் முஸ்லிம் பெயருள்ள யாராவது சொ எதையாவது சொன்னால் போதுமே இந்த எதிரிகளுக்கு பாவம் வெறிகொண்டு அலைகிறார்கள் மாற்றுப் பெயர் கொண்டு
ReplyDeleteபரவாயில்லை.. எனது முதலாவது பின்னூட்டத்திலுள்ள கூற்றை நிரூபிப்பதற்கு பின்னிணைப்பாக இன்னுமொருவரும் இணைந்திருக்கின்றார் பாருங்கள்.
ReplyDelete