Header Ads



"முஸ்லிம்கள் உயிர்த்தெழ, வேண்டிய தருணம்"

அரசியலமைப்பு மாற்றம் தொடர்பான வாதங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றன. நாடு முழுவதும் இது தொடர்பான கருத்துக் கணிப்புக்கள் நடைபெற்று வருகின்றன. மக்களது பங்களிப்புடன் செய்யப்பட வேண்டிய இந்த மாற்றங்கள் தொடர்பில் முஸ்லிம் சமூகம் தொடர்ந்தும் அலட்சியமாகவே இருந்து வருகிறது.

தமது விவகாரங்கள் அனைத்தையும் அரசியல்வாதிகளே பார்த்துக் கொள்வார்கள் என்ற மூடத்தனமான நம்பிக்கையிலிருந்து சமூகம் இன்னமும் மீண்டதாகத் தெரியவில்லை. வழமைபோல முஸ்லிம் கட்சிகள் தாம் செயற்பாட்டில் இருப்பதாக சமூகத்துக்குப் பாசாங்கு காட்டுவதற்காக வேண்டி சுற்றுப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்திருக்கின்றன. நாட்டிலுள்ள மக்களை விட்டு விட்டு வெளிநாடுகளில் ஆலோசனை கேட்பதற்காக சில கட்சிகள் சுற்றுலாக்களை தொடங்கியிருக்கின்றன.

புதிய அரசியலமைப்பு மாற்றம் வரப்போவதனால் பாராளுமன்றத்துக்கு இது தொடர்பில் தெளிவுள்ளவர்களை அனுப்ப வேண்டும் என பாராளுமன்றத் தேர்தலின்போது சமூகம் தயாராகவே இருந்தது. ஆனாலும் பொருத்தமானவர் களை தேர்தலுக்காக தெரிவுசெய்யாமல் அரசியல் கட்சிகள் விட்ட தவறை, அரசியல் மாற்றத்துக்கான தற்போதைய கருத்தாடல்களின்போது சமூகம் உணர்ந்து கொண்டுள்ளது.

இதுதான் முஸ்லிம்களின் சிவில் நிறுவனங்கள் உயிர்த்தெழ வேண்டிய தருணம். அரசியலமைப்பு தொடர்பான தெளிவுகளைப் பெறுவதற்கு அரசியல்வாதிகளை நம்பி ஏமாந்து போயுள்ள சமூகம், சிவில் நிறுவனங்களில் பெரும் எதிர்பார்க்கைகளை வைத்து காத்துக் கொண்டிருக்கிறது. இனி இது தொடர்பில் இந்த அரசியல்வாதிகள் அலசுவார்கள் என்ற நம்பிக்கை சமூகத்திற்கு இல்லை.

அல்குர்ஆன்தான் சட்ட யாப்பு என்று கூறிய அரசியல் கட்சிகள், இஸ்லாத்தின் அல்குர்ஆனை படிப்பிக்கவுமில்லை. இலங்கையின் அரசியல் யாப்பினை கற்றுத் தரவுமில்லை. இந்த நிலையில் தாம் ஆளப்படுகின்ற அரசியல் யாப்பு தொடர்பில் முஸ்லிம் சமூகத்தினது அறிவு ஏனைய சமூகங்களை விட மிகவும் குறைவாகவே காணப்படுவது கவலைக்கிடமானது.

ஒற்றையாட்சி, சமஷ்டி முறைமை, முஸ்லிம் தேசியம் என்ற எண்ணக்கருக்கள் பற்றிய எந்தவிதமான தெளிவும் பெரும்பாலான முஸ்லிம்களிடம் இல்லை. இந்த நிலையில் எமது பிரச்சினைகளுக்கான தீர்வு ஒற்றையாட்சியில் கிடைக்குமா அல்லது சமஷ்டி முறையில் கிடைக்குமா என்பதானதொரு கேள்வியை முஸ்லிம் சமூகத்திடம் கேட்பதே அபத்தமானதாகத் தெரிகிறது.

இங்குதான் சிவில் நிறுவனங்களின் பங்களிப்பு வேண்டி யிருக்கிறது. முடிந்த முடிவுகளை நோக்கி அரசியல் மாற்ற செயற்பாடுகள் நகர்வதாகத் தெரிந்தாலும் தமது இருப்பையும் பாதுகாப்பையும் உத்தரவாதப்படுத்திக் கொள்வதற்கான பொறிமுறையை அரசியல் அமைப்பில் உட்படுத்துவதற்கான முயற்சியையாவது சமூகம் செய்தாக வேண்டியிருக்கிறது.

முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கியுள்ள வெறுப்புணர்வுப் பிரச்சாரங்களுக்கும், இருப்புக்கு எதிரான அச்சுறுத்தல்களுக்குமான தீர்வினை மாறி மாறி வருகின்ற அரசாங்கங்களிடம் கெஞ்சிக் கேட்டுப் பெற்றுக் கொள்வதனை விட அரசியலமைப்பிலேயே அதனை உறுதிசெய்து கொள்வதற்கான ஓர் அரிய சந்தர்ப்பம் தமக்கு வாய்த்திருப்பதை சமூகம் உணராமலிருக்கிறது. சிவில் நிறுவனங்களின் பணி இங்கிருந்து தொடங்க வேண்டும்.

ஊருக்கு ஊர், தெருவுக்குத் தெருவாகச் சென்று எமது மக்களை இது தொடர்பில் அறிவூட்ட வேண்டியது இவர்களது கடமையாகும். ஏனெனில் உத்தேச அரசியல் மாற்றம் தொடர்பில் மக்களது கருத்து பெறப்பட்டு, அது பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுக்கப்படவிருக்கிறது. பாராளுமன்றத்தில் எமது அரசியல் ஞான சூன்யங்களைக் கடந்து இது அங்கீகரிக்கப்பட்டாலும் மக்களது இறுதிச் சந்தர்ப்பமாக சர்வசன வாக்கெடுப்பு நடக்கவிருக்கிறது.  அது வரையில் மக்களை விழிப்பூட்டுகின்ற தொடரான பணி சிவில் நிறுவனங்களால் நடத்தப்பட வேண்டும்.

அரசியலமைப்பு மாற்றத்தை தேர்தல் முறை மாற்றங்களுடன் பிசைந்து போட்டுக் கொண்டு, தலையைப் பிய்த்துக் கொள்கின்ற அளவுக்கு சில சமூகத் தலைமைகளும் குழம்பிப் போயிருக்கின்ற சூழலில், அரசியல்வாதிகளில் மொத்தமாகவே மக்கள் நம்பிக்கையற்றுப் போயிருக்கின்ற சூழலில், சமூகத்தை விழிப்பூட்டிக் காப்பாற்ற வேண்டிய பணியை சிவில் அமைப்புக்கள்தான் செய்ய வேண்டியிருக்கிறது.

இலங்கை முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரையில் ஏராளமான சிவில் அமைப்புக்கள் இருந்தபோதிலும், அவை அரசியலால் வளைத்துப் போடப்பட்டு, சமூகத்தில் செல்வாக்கிழந்தவைகளாகவே இருக்கின்றன. தமக்கு முதுகெலும்பு இருக்கிறது என்பதனை சமூகத்துக்கு நிறுவிக் காட்ட அவற்றுக்கு ஒரு சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது.

-MEELPARVAI-

11 comments:

  1. நீங்கள் எப்பொழுது சுயமாக விழித்தீர்கள் என்றுமே இல்லையே எப்பொழுது தமிழர்களின் உரிமைகள் பேசப்படுகிறதோ அப்பொழுது ஆ எனக்கும் பசிக்கிறது சாப்பாடு தா என்பது தமிழர் நிலைபற்றி யாரும் எதுவும் கதைக்காத நிலையினில் அரசாங்கத்துடன் கூடிக்குளாவுவது இதை தான் ....................... என்பார்கள்

    ReplyDelete
  2. நண்பர் வரனுக்கு வரலாறு மறந்து விட்டது அல்லது மறைக்கிறார் என்று நினைக்கிறேன் வடகிழக்குப் போராட்டம் ஆரம்பத்தில் தமிழ் மக்களின் போராட்டமாகத்தான் இருந்தது அனைத்து இயக்கங்களிலும் முஸ்லிம் போராளிகளும் (தலைவர்கள் உட்பட) முஸ்லிம்கள் அவர்களை கதாநாகர்களாக வர்ணிப்பதுமாகத்தான் வாழ்ந்து வந்தனர் ஆனால் எப்போது போராட்டக்குழுக்களின் கை மேலோங்கத் தொடங்கி தமிழர்களுக்கு என ஓர் பகுதி அல்லது தமிழர் பிரச்சினை உணரப்பட்டதோ அப்போதே அது தமிழ் போசும் அனங்களின் பிரச்சினை என்ற நிலை மாறி தமிழர் பிரச்சினை என்று தமிழ் தலைகளால் தட்டு மாற்றப்பட்டது
    1990 களில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட வெறித்தனமான தாக்குதல்களையும் வடக்கு முஸ்லிம்களின் திட்டமிட்ட சுத்திகரிப்பையும் அதனை எதிர்து இயக்கங்களில் இருந்து கொன்டு குரல் கொடுத்த போராளிகள் போட்டுத் தள்ளப்பட்டதையும் மறந்து விட்டடாரோ? தெரியவில்லை
    உங்களுக்குத் தெரியுமா வடகிழக்கு இணைந்த மாகாணமாக இருந்த காலத்தில் அந்த மாகாண சபையின் அனைத்து திட்டங்கள் மற்றும் திணைக்களத் தலைமைகள் கருத்திட்ட பதவிநிலை அதிகரிகளின் பட்டியலை ப் பாருங்கள் உங்களுக்கே ஆச்சரிமாக இருக்கும் வடகிழக்கில் அப்போது (வடகிழக்கு இணைந்திருந்த காலத்தில் வடகிழக்கில் படித்த முஸ்லிம்கள் இருக்கவில்லை போலத் தோண்றும்

    நீங்கள் உங்களுக்கு என ஒரு பகுதி தற்காலிகமாக உருவான போது அடுத்த கணம் நீங்கள் செய்தது தனது சகோதர (தொப்பிள் கொடி என்று அக்காலத்தில் தமிழ் அரசில் வாதிகள் சொன்ன) இனத்தை சுத்திகரித்ததுதான் இப்போது உங்களுடன் சேர்ந்து செயற்பட்டு உங்களுக்குக் கொடுங்கள் என்று கேட்டால் நீங்கள் ஏற்கனவே செய்தவைகளை மீண்டும் அரங்கேற்ற மாட்டீர்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்

    வேறொன்றும் வேண்டாம் தமிழ் அரசியல் வாதிகளும் மக்களும் வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டார்கள் என்றாவது கூறுகின்றீர்களா? நீங்கள் சொல்வதெல்லாம் வடக்கில் இருந்து வந்த முஸ்லிம்கள் என்று சரி அதையாவது மீழக் குடியேற அணுமதிக்கின்றீர்களா? இல்லை காரணம் அவர்கள் அவர்கள் வெளியேற்றப்பட்ட பின்னர் அதிகரித்து விட்டார்களாம் அப்ப 1990 தொடக்கம் இன்று வரை வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் பிள்ளை பெறாமல் இருந்திருக்க வேண்டு என்பதா உங்கள் கருத்து

    ReplyDelete
  3. வடகிழக்கு இணைந்திருந்த காலத்தில் நமது தொப்பிள் கொடிகள் செய்த பல ;தப்பசுவையான சம்பவங்கள் உள்ளன அவைகளை வெளியிட்டால் தனிப்பட்ட தாக்குதல்களாக அமையும் இன்றும் வடக்கில் உள்ள மனோநிலையை உங்கள் இதயத்தில் கைவைத்து சொல்லுங்கள் ஒர் தமிழ் அரசிய்வாதி செய்த சேவையை விட ரிஸாத் தமிழர்களுக்குச் செய்துள்ளார் ஆனால் அவர் அவரது இனத்திற்கு செய்யப் போனால் அது காடு வெட்டலாகவும் அதற்கு ஆர்ப்பாட்டமும் இதையே நீங்கள் செய்தால் அது மீழ் குடியேற்றம் உங்களுக்குத் தெரியுமா வடக்கின் 1990ம் ஆண்டைய வரைடத்தில் இருந்த குடியேற்றப் பகுதிகளையும் 2009ம் ஆண்டின் குடியேற்றப் பகுதிகளையும் ஒப்பிட்டுப் பாருங்கள் நீங்கள் உங்கள் தொப்புகொடியை நீங்கள் அறுத்து விரட்டாது விடடிருந்தால் நாங்களும் உங்களைப் போல் சமமாக பரவியிந்திருப்போமே எங்களுக்கும் நிலம் வடக்கில் இருந்திருக்குமே 1972ம் மற்றும் 1983ம் ஆண்டுகளில் மலையகத்தில் இருந்து வந்த தமிழ் மக்களுக்கு வடக்கில் நிலம் இருகிறது (விவசாய நிலம் உட்பட) ஆனால் 1800 ம் ஆண்டு முதல் தெளிவான வரலாறு கொண்ட உங்கள் தொப்பிள் கொடிக்கு நிலம் இல்லை அதைக் கேட்டால் நீங்கள் எத்ததை பேர் சென்றீர்களோ அத்தனை போர்தான் வரவேண்டும் புதிய நியாயம்

    ReplyDelete
  4. வடகிழக்கு இணைந்திருந்த காலத்தில் நமது தொப்பிள் கொடிகள் செய்த பல ;தப்பசுவையான சம்பவங்கள் உள்ளன அவைகளை வெளியிட்டால் தனிப்பட்ட தாக்குதல்களாக அமையும் இன்றும் வடக்கில் உள்ள மனோநிலையை உங்கள் இதயத்தில் கைவைத்து சொல்லுங்கள் ஒர் தமிழ் அரசிய்வாதி செய்த சேவையை விட ரிஸாத் தமிழர்களுக்குச் செய்துள்ளார் ஆனால் அவர் அவரது இனத்திற்கு செய்யப் போனால் அது காடு வெட்டலாகவும் அதற்கு ஆர்ப்பாட்டமும் இதையே நீங்கள் செய்தால் அது மீழ் குடியேற்றம் உங்களுக்குத் தெரியுமா வடக்கின் 1990ம் ஆண்டைய வரைடத்தில் இருந்த குடியேற்றப் பகுதிகளையும் 2009ம் ஆண்டின் குடியேற்றப் பகுதிகளையும் ஒப்பிட்டுப் பாருங்கள் நீங்கள் உங்கள் தொப்புகொடியை நீங்கள் அறுத்து விரட்டாது விடடிருந்தால் நாங்களும் உங்களைப் போல் சமமாக பரவியிந்திருப்போமே எங்களுக்கும் நிலம் வடக்கில் இருந்திருக்குமே 1972ம் மற்றும் 1983ம் ஆண்டுகளில் மலையகத்தில் இருந்து வந்த தமிழ் மக்களுக்கு வடக்கில் நிலம் இருகிறது (விவசாய நிலம் உட்பட) ஆனால் 1800 ம் ஆண்டு முதல் தெளிவான வரலாறு கொண்ட உங்கள் தொப்பிள் கொடிக்கு நிலம் இல்லை அதைக் கேட்டால் நீங்கள் எத்ததை பேர் சென்றீர்களோ அத்தனை போர்தான் வரவேண்டும் புதிய நியாயம்

    ReplyDelete
  5. நாங்கள் தமிழ் சமுகத்தின் ஆயுததாரிகளால் முஸ்லிம் சமுகம் தாக்கப்பட்ட சந்தர்ப்பங்கள் அல்லாத அனைத்து சந்தர்ப்பங்களிலும் நாங்களி தமிழர்களுக்கோ தமிழர்களின் உரிமைகளுக்கோ எதிராக இருந்ததும் இல்லை அவ்வாறு நடந்ததாக உங்களால் காட்டவும் முடியாது ஆனால் கடந்த ஆட்சிக்காலத்தில் புது பலசோனாவின் வருடர்ந மாநாட்டில் அதிலும் முஸ்லிம்களுக்கு எதிராச கோசங்களுடன் இந்து மாமன்றத்தில் தலைவர் முழங்கினார் நாங்கள் எப்போதாவது (இயக்கங்கள் முஸ்லிம்களைக் கொண்று குவித்த காலம் முதல்) தமிழர்களுக்கு எதிராக குரல் கொடுத்தோமா? அல்லது இயக்கங்களின் செயல்களை எதிர்த்தேமா? சிந்தியுங்கள்!!!!!!! புதுபலசேனா வந்தவுடன் அவர்களுடன் கைகோர்து நின்று முழு முஸ்லிம் சமுகத்தையும் குறை கூறிய இந்து மாமன்றத்தையும் அதன் அதைவரையும் கண்டித்து அறிக்கையிட்ட தமிழ் தலைவர்கள் எத்தனைபேர் ????? எனது காது கேட்ட பல தமிழ் கடைகளில் தமிழ் நண்பர்கள் இது பற்றி பேசிக்கொண்டவைகள் (பலசேனாவிற்கு ஆதரவாக) எனது காதுகளில் இன்றும் ஒலிக்கின்னறன கடைசியில் பலசேனா தமிழர்களையும் எதிரக்க ஆரம்பித்தபோதுதான் இந்துமாமன்றம் வாய் மூடி மௌனியானது

    ReplyDelete
  6. இறுதி யுத்தத்தில் குறிப்பிடத்தக்க முஸ்லிம்கள் முள்ளிவாய்க்காலில் மாட்டியிருந்திருப்பார்களானால் இன்று வரலாறான பல போராட்டத்தலைவர்கள் உயிருடன் இருந்திருப்பர் (இறைவன் நாட்டம் வேறாக அமைந்நது) இறுதியாகச் சொல்கிறேன் நீங்கள் முஸ்லிம்களை அவர்களின் உரிமையை மறுத்து அவர்களை நசுக்கி உங்களின் உரிமையைப் பெற நினைத்தா அல்லது பெற்றபின் உங்களுக்கு இருக்கடா பாடம் என்று நினைத்தால் அது நீங்கள் கானும் கனவாவே இன்ஸா அல்லா அமையும் மேலும் ; கசப்பாக இருந்தாலும் சொல்ல வேண்டுமபொரும்பாண்மை இனவாதிகளால் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை விட தமிழ் ஆயுதக்குழுக்களாலும் வடகிழக்கு இணைந்திருந் காலத்தில் செய்யப்பட்ட பக்கச்சார்பான விடயங்களும் அதிகம்
    இறுதினாக உள்நோக்கம் இல்லாமல் தமிழர்களும் முஸ்லிம்களும் இணைய முடியுமானால் அதைவிட பலமான சக்தி வடகிழக்கில் வராது!!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  7. திரு M Y M Jiffry : போதுபலசேனாவுடன் தமிழர்கள் கைகோர்த்துள்ளர்களா ? போதுபலசெனா ஆரம்பிக்கப்பட்டதே தமிழர்களுக்கு எதிராக தான் . யுத்தம் முடிவடைந்தபின் அவர்களுக்கு வேறு விடயங்கள் இல்லாததால், முஸ்லிம்களின் மீது தமது பார்வையை திருப்பினர். அவ்வளவு காலமும் எந்த முஸ்லிமும் அவர்களை கண்டிக்கவே இல்லை.

    இந்து மாமன்றம் எங்கு உள்ளது அதன் தலைவர் யார் என்று உங்களுக்கு தெரியுமா ? நீங்கள் குறிப்பிடும் பலசேனா கூட்டங்களில் தோன்றும் அந்த இந்து தலைவர் மற்றும் அவரது அமைப்பு எங்கு உள்ளதென்று எவருக்குமே தெரியாது . இது போதுபலசேனாவால் பிரச்சார நடவடிக்கைக்காக உருவாக்கப்பட்ட வெற்று(Dummy ) அமைப்பு .அகில இலங்கை இந்து மாமன்றம் (All Ceylon Hindu Congress ) இதை வன்மையாக கண்டித்ததுடன் போதுபலசேனா போன்ற வன்முறை அமைப்புடன் இந்துக்கள் சேரவேண்டிய எந்த அவசியமும் இல்லை என கோடிட்டு காட்டியது. தேவை இல்லாமல் அகில இலங்கை இந்து மாமன்றத்தை இங்கு இழுக்க வேண்டாம்.

    உங்களது பின்னோட்டம் முழுவதும் பக்க சார்பானதாகவே உள்ளது. ஆரம்பம் முதலே இலங்கை முஸ்லிம்கள் தமிழர்களுடன் ஒற்றுமையாக இருந்ததில்லை சிங்களவர்களுடன் சேர்ந்து தமிழர்களை எப்படி ஒடுக்க வேண்டுமோ அவை அனைத்தையும் செய்து வந்துள்ளனர். தமிழ் ஆயுத குழுக்களால் முஸ்லிம்கள் தாக்கப்பட்டதை குறிப்பிட்ட நீங்கள் முஸ்லிம் ஆயுதக்குழுக்களினால் தமிழர்கள் அழிக்கப்பட்டதை மறைத்துவிட்டீர்கள்.

    அத்துடன் யுத்த காலத்தில் சிங்களவர்களிடமிருந்து கிடைத்த அதிக சலுகைகளை பெறுவதில் பின்நிற்கவில்லை. அது மட்டுமல்லாது சில நேரங்களில் சிங்களவர்கள் சும்மா இருந்தாலும் அவர்களை தூண்டி விட்டு தமிழர்களை கொடுமை படுத்தினர்.

    ReplyDelete
  8. திரு குமார் சுகததாச உள்ளரங்கில் 2015ம் ஆண்டு நடைபெற்ற புதுபலசேனா மாநாட்டில் பேசிய நபரை உங்களுக்குத் தெரிமா என்று எனக்குத் தெரியாது ஆனால் அவர் இனவாதப் போக்குடைய இந்து அமைப்பு அவரை இந்து மாமன்றத்தின் தலைவர் என்றே அழைக்கப்பட்டார் அவரின் தனிப்பட்ட தகவல்கள் தரவும் என்னால் முடியும் அது தனிமையான வாதமாக அமையும் என்பதால் தவிரக்கிறேன் முஸ்லிம் ஆயுதக்குழுக்களால் தமிழ் கிராமங்களில் புகுந்து தாக்குதல் நடத்தியதற்கான ஏதாவது ஓர் தகவலைத் தரமுடியுமா? சம்பவத்தைத் திருப்ப வேண்டாம் நான் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவன் 90களில் எவ்வாறு நடந்தது என்பதை நான் பதிவிடுகிறேன் இதில் எங்கு முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் சம்பந்தப்பட்டன என்று பாருங்கள்

    முதலில் காலை செய்திவரும் கொழும்பில் இருந்து வந்த வாகனம் அல்லது மட்டக்கிளப்பில் இருந்தவாகனம் பயணிகளுடன் கடத்தப்பட்டனர் பின்னால் எமது ஊரார் வேலைக்கு வரும் ஏழைத் தமிழ் தொழிலாளர்களைப் பிடிப்பார்கள் (துணிதுவைப்பவன் மரம் தறிப்பவன்) இதில் என்ன விடயம் என்றால் நாங்களே எந்த ஏழைத் தொiழிளாரகளைக் காப்பாற்றுவோம் காரணம் அவர்கள் நீண்டகாலமாக எங்களது வீடுகளில் தொழில் செய்தவர்கள் இவ்வாறு இழைஞ்ஞர்களால் பிடிக்க முயற்ச்சி செய்யப்பட்ட கடவுள் என்று அழைக்கப்பட்ட எங்கள் பேக்கரியில் விறகு வெட்டியாக இருந்த தவராசா 04 நாட்களாக எங்கள் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டு பாதுகாப்பாக மாறுவேடம் அணிவிக்கப்பட்டு எனது குடும்பத்தால் காப்பாற்றப்பட்டார் இவ்வாறுதான அதிகமான முதலாளிமார் தமது வேலையாட்களைக் காப்பாற்றினர்

    இதையும் மீறி சில சம்பவங்கள் நடக்கவில்லை என்று நான் முற்றாக மறுக்கவில்லை காரணம் முழு வாகனமும் கடத்தப்பட்டு ஊரே அதிலும் பெண்களும் சிறுவர்களும் அகப்பட்டடார்கள் என்று செய்தி வந்தால் யார் பொறுத்திருப்பான் கிழக்கில் நடந்த அனைத்து சம்பவங்களுக்கும் ஆரம்பம் முதலில் முஸ்லிம்களை கடத்தி அல்லது கொலை செய்து எங்கள் தொப்பிள் கொடிகள் ஆரம்பித்து வைத்தவைகளே காரணம் அன்றி வேறில்லை உங்களால் அதுவும் 100 முஸ்லிம் சுடப்பட்டு அல்லது கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தால் அதற்காக ஒர் அல்லது இரண்டு தமிழ் ப்பஏழைகள் கொல்லப்பட்டிருக்கலாம் ஆனால் முஸ்லிம்கள் சார்பில் படித்த வழமான மற்றும் செல்வச் செழிப்புள்ளவர்களின் கூட்டம் மடக்கப்படும் காரணம் அவர்கள் கடத்தப்பட்டவுடன் உயர்மட்டத்தில் தமிழ் ஊர்களில் செய்தி பரப்பட்டிருக்கும் இதையும் மீறி ஓர் இரண்டு ஏழத் தமிழர்கள் மாட்டக் காரணம் அவர்கள் தங்கியிருந்து தொழில் செய்வதும் அறியாமைகாரணமாக அதிகாலையில் வருவதும் ஆனால் எந்த ஒரு தமிழ் பெண்களுக்கோ சிறுவர்களுக்கோ முஸ்லிம்களால் பாதிப்பு வந்ததே இல்லை

    ReplyDelete
  9. அடுத்தது நீங்கள் கூறியுள்ள முஸ்லிம் இயக்கங்கள் அதாவது நிலமை படிப்படியாக முற்றிவிட தமிழ்; ஆயுததாரிகள் முஸ்லிம் ஊர்களில் புகுந்து துப்பாக்கிகயால் சுட மற்றும் முஸ்லிம்கள் அதிகம் சேரும் பகுதிகளில் குண்டுகளை வைத்தனர் (காத்தான்குடி, ஏறாவூர் மற்றும் கல்முனை சாய்ந்தமருது) எனவே அரச உதவுயுடன் (இதற்கு நீங்கள் சிங்களவர்களின் உதவியடன் என்பீர்கள்) ஊர்காவற் பிரிவு அமைக்கப்பட்டு கிராமங்கள் இரவு இரவாக பாதுகாக்கப்பட்டன அதனை சிலர் ஜிகாத் குழுக்கள் என்றும் அழைத்தனர் ஜிகாத் என்பதன் விளக்கம் தேவைப்படின் தரவும் முடியும் ஆனால் சுருக்கமாக சமுகத்தைப் பாதுகாப்பதற்காக அல்லது நன்மையை ஏவித் தீமையைத் தடுப்பதற்காக இஸ்லாத்தில் உள்ள ஓர் பொதுப் பதம்
    உண்மையில் சொல்லப்போனால் அந்த ஜிகாத் அமைப்பிடம் இருந்தகைளில் அதிக ஆயுதங்கள் போரிலாக செய்யப்பட்டவைகள் சிலவைகள் அரசால் வழங்கப்பட்டவைகள் சில ஈபிஆர்எல்எப் பிரவினர் விற்றவைகள் அவைள் 1996 ஆண்டு மீண்டும் அரசிடம் கையளிக்கப்பட்டன
    நீங்கள் யுத்த காலத்தில் சிங்களவர்களிடம் இருந்து கிடைத்த உதவிகளைப் பெற பின்னிக்கவில்லை என்று கூறுவது தப்பு நாங்கள் சிங்களவர்களிடம் இருந்து சலுகை பெறவில்லை அரசிடம் இருந்து அப்படியாயின் நீங்கள் யுத்த காலத்தில் அரச தொழில்களையும் மறுத்து வாழ்ந்திருக்க வேண்டும் அதை நீங்கள் செய்யவில்லை காரணம் அது அரசு என்பதால் அரசு என்பது யாருக்கும் பொதுவானது தமிழ் தலைமைகள் புலிகளுக்குப் பயந்து அரசுடன் இணைந்திருக்கவில்லை மற்றும் நீங்களும் அவர்கள் இணைந்திருப்பது தெரிந்தால் வாக்களித்திருக்கவும் மாட்டீர்கள் அல்லது புலிகள் அவர்களைக் கொலை செய்து விடவார்கள் (லக்மன்,) ஆனால் அரசுடன் (அதிலும் மேலாக இனவாத சிங்கள தலைவர்களுடன்) தங்களது சொந்வியாபாரத்திற்காக தொடர்புகளை வைத்திருந்து மேலால் தமிழ் வாதம் பேசிய பல தமிழ் தலைவர்கள் ( மண்ணெண்னை ரவிராஜ்) எனக்குத் தெரியும் ஆனால் முஸ்லிம் தலைவர்கள் அவ்வாறு செய்யவில்லை வெளிப்படையாகவே அரசுடன் இருந்தனர் அதில் தவறு இருப்பதாக முஸ்லிம்கள் உணரவில்லை அது உங்களுக்குப் தப்பாகத் தெரிந்தால் அதற்கு முஸ்லிம்கள் ஒன்றும் செய்வும் முடியாது நீங்கள் உங்கள் கை ஓங்கும் போது எங்களைக் கொண்னறு குவிக்கும் போது அரசிமட சார்நது நிற்பது தப்பில்லை ஆனால் அதற்காக நாங்கள் எங்கள் தொப்பிள் கொடியை அறுத்து உங்களைப் போல் அழிக்க நினைக்கவில்லை

    ReplyDelete
  10. திரு MYM Jiffry : போதுபலசேனா கூட்டங்களில் இந்து அமைப்பு என்று கூறித்திரிபவரின் பின்புலம் பற்றி தெளிவாக விளக்கப்படுத்தியும் கூட அது இந்து மாமன்றத்தின் தலைவர் என்று பிடிவாதம் பிடித்தால் நான் ஒன்றும் செய்ய முடியாது. ஒரு தகவலா? எராளமாக தரலாம் அதற்கு ஆதாரமில்லை என்பீர்கள். அதனால் சர்வதேச மன்னிப்புச்சபையால் உத்தியோகபூர்வமாக பதிவு செய்த இரண்டை தருகிறேன் :

    01. ஏறாவூர் படுகொலைகள் - 12.08.1990 - தாக்குதல் நடாத்தியவர்கள் - முஸ்லிம் ஊர்காவல் படையினர்.
    02. வீர்ரமுனை படுகொலைகள் - 20.02.1991 - தாக்குதல் நடாத்தியவர்கள் - முஸ்லிம் ஊர்காவல் படையினர்.

    இது போல பல.

    உங்களது பதிவுகளில் முஸ்லிம்கள் உத்தமர்கள் போலவும் நடந்த தவறுகளுக்கு தமிழர்களே முழுக்காரணம் என பொருள் படும்வண்ணம் குறிப்பிட்டிருந்தீர்கள்.அது தவறு.

    ReplyDelete
  11. நீங்கள் குறிப்பிட்டுள்ள அனைத்திற்கும் ஆரம்ப்திலேயே அதாவது 2016.02.26 திகதிய 5.28 எனது பின்னூட்டலின் மூன்றாம் பந்தியில் '''சில சம்பவங்களை நான் மறுக்கவில்லை'''' என்று ஆரம்பித்துப் ஏற்கனவே குறிப்பிற்டுள்ளளேன் ஆனாலும் அவைகளின் ஆரம்பமும் தமிழ் போரளிக்குழுக்களின் செயற்பாடுகளின் நடவடிக்கைகளே பின்னனி இன்று நாம் ஒற்றுமையாக வாழ யார் தடையாக உள்ளனார்? ஏன் நாம் ஒற்றுமையாக வாழ முடியாது வடக்கில் தமிழர் ஆட்சியில் முஸ்லிம்களும் கிழக்கில் முஸ்லிம்கள் ஆட்சியில் தமிழர்களும் வாழ்ந்தால் சிறப்பான ஒற்றுமை கிடைக்குமல்லவா? நாம் மொழியால் ஒன்றுபட்டவர்கள் எமது மதங்களைத் தவிர அனைத்தும் ஒரே மாதிரியானவை தானே ஏன் ஒன்றாக வாழ முடியாது

    ReplyDelete

Powered by Blogger.