வன்புணர்வின் பின் கொலையுண்ட மாணவியின் உடலுடன், குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்க ஊர்வலம்
வவு/ உக்குளாங்குளம் பகுதியில் வன்புணர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட மாணவியின் உடலைத் தாங்கிய மக்கள் குற்றவாளிகளை கைதுசெய்து மரண தண்டனை வழங்கு எனக் கூறி ஊர்வலம் ஒன்றினை நடத்தினர்.
நேற்று பிரேத பரிசோதனை முடிவடைந்த நிலையில் சடலம் தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின் இன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என பெருமளவானோர் மத்தியில் இறுதி கிரியைகள் நடைபெற்று பொலிஸ் பாதுகாப்புடன் வீட்டில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
உயிரிழந்த மாணவி கல்விகற்ற விபுலானந்தா கல்லூரி முன்பாக சென்று வேப்பங்குளம் இந்து மாயானத்தில் மாணவியின் உடல் புதைக்கப்பட்டது.
இதன்போது குற்றவாளிகளை கைது செய், மாணவர்களை சுதந்திரமாக வாழவிடு, வன்புணர்வு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கு போன்ற சுலோகங்கள் எழுதப்பட்ட அட்டைகளுடன் ஊர்வலமாக சென்றனர்.
இந்த ஊர்வலத்தில் பொதுமக்கள், மாணவர்கள் என பலர் கலந்துகொண்டுள்ளனர்.
விபுலானந்தா கல்லூரி முன்பாக ஊர்வலம் சென்றபோது பாடசாலை மாணவர்களை அஞ்சலி செலுத்த அனுமதிக்குமாறு கோரிய வேளையில் இன்றைய தினம் கடமையைப் பொறுப்பேற்ற புதிய அதிபர் அனுமதி வழங்காமையால் முறுகல் நிலை ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
பின் பொலிஸார் தலையிட்டு பிரச்சனையை சமரசம் செய்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment