இலங்கை முஸ்லிம் விவகாரங்கள் தொடர்பாக, உரிய கவனம் செலுத்தப்படும் - சயீட் அல் ஹுஸைன்
இலங்கைக்கு விஜயம் மேற் கொண்டிருக்கும் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் சயீட் அல் ஹுஸைன் அவர்களை நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிரதிநிதிகள் நேற்று (06.02.2016) மாலை சந்தித்தனர். NFGGயின் மட்டக்களப்புப் பிராந்திய சபையின் செயலாளர் MACM ஜவாஹிர் அவர்களின் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவே திருகோணமலையில் இந்த விசேட சந்திப்பினை மேற்கொண்டிருந்தது.
இலங்கைக்கான இந்த விசேட விஜயத்தினை மேற்கொண்டிருக்கும் ஐ.நா மனித உரிமை ஆணையாளர், சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் காணப்படும் முன்னேற்றங்களை நேரடியாகக் கண்டறியும் பொருட்டு பல்வேறு சந்திப்புக்களை மேற் கொண்டு வருகிறார்.
அந்த வகையில் இலங்கை சிறுபான்மை மக்களும் குறிப்பாக வடகிழக்கு முஸ்லிம்களும் எதிர் கொணடு வரும் பிரச்சினைகள் தொடர்பில் விடயங்களை முன்வைக்கும் முகமாகவே NFGG பிரதிநிதிகள் இந்த சந்திப்பினை மேற்கொண்டிருந்தனர். இதன்போது சமகால முக்கியத்துவம் கொண்ட பல்வேறு விடயங்களும் மனித உரிமையாளர் கவனத்திற்கு சுட்டிக்காட்டப்பட்டன.
குறிப்பாக, வடகிழக்கு முஸ்லிம்களின் காணிப்பிரச்சினைகள், மீள்குடியேற்ற விடயங்களில் காட்டப்படும் பாரபட்டசம், இராணுவத்தினரின் பிடியிலிருந்து விடுவிக்கப்படவேண்டிய காணிகள், வெறுப்புணர்வு பிரச்சாரத்தைத் தடுக்கும் சட்டமூலத்தினைக் கொண்டு வருவதற்கு அரசாங்கம் காட்டும் தாமதம், முஸ்லிம்களுக்கு எதிராக கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட இனவாத நடவடிக்கைகளுக்கு சட்ட நடவடிக்கை இதுவரை மேற்கொள்ளப்படாமை போன்ற விடயங்கள் ஐ.நா ஆணையாளரின் கவனத்திற்கு சுட்டிக் காட்டப் பட்டன. அத்தோடு இனப்பிரச்சினை வரலாற்றில் 80 களின் நடுப்பகுதியில் இருந்தே வடகிழக்கு முஸ்லிம் சமூகம் கடுமையான பாதிப்புக்குள்ளாகி இருப்பதனால் ஐ.நாவின் மனித உரிமைகள் தொடர்பான விசாரணைகள் இக்காலப் பகுதியினையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் எனவும் NFGG பிரதிநிதிகள் ஆணையாளரிடம் எடுத்துக் கூறினர்.
மேலும், கடந்த காலங்களில் நடந்த தீர்வு முயற்சிகளிலும், தீர்வு முன்மொழிவுகளிலும் முஸ்லிம்களுக்கு உரிய இடமும் முக்கியத்துவமும் வழங்கப்படவில்லை என்ற விடயத்தையும் சுட்டிக்காட்டிய NFGG பிரதிநிதிகள், தற்போது சர்வதேச சமூகத்தின் அனுசரணையோடு இலங்கையில் அரசியல் தீர்வொன்றுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் சந்தர்ப்பத்தில் முஸ்லிம்களின் நலன்களும் முழுமையாக உள்வாங்கப்பட்டு நியாயமான தீர்வுகள் வழங்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தினர்.
இந்த முக்கிய விவகாரங்கள் தொடர்பாக ஐ.நா சபையின் கவனத்தைக் கோரும் எழுத்து மூல மனுவொன்றும் NFGG பிரதிநிதிகளால் இச்சந்திப்பின் போது ஆணையாளரிடம் கையளிக்கப்பட்டது.
இதற்குப் பதிலளித்த ஆணையாளர் இலங்கை முஸ்லிம்களின் விவகாரங்கள் தொடர்பாகவும் தாம் ஏற்கனவே கவனம் செலுத்தியுள்ளதாகவும் இங்கு முன்வைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படும் எனவும் உறுதியளித்தார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கொதிரான இனவாத அச்சுறுத்தல்கள் உச்ச நிலையில் இருந்த கால கட்டத்தில் ஐ.நா ஆணையாளர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்ய போது, முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பாக , NFGG அவரை பகிரங்கமாக சந்தித்து அறிக்கை சமர்ப்பித்திருந்தது என்பது குறிப்பிடத் தக்கது. அத்தோடு, அந்த அறிக்கையினூடக சமர்ப்பிக்கப்பட்டவிடயங்கள் ஐ.நா.வின் உத்தியோக பூர்வ அறிக்கைகளிலும் பிரேரேணைகளிலும் பின்னர் உள்வாங்கப்பட்டிருந்ததும் நினைவு படுத்தத் தக்கதாகும்.
ஏதாவது நடக்கும் என்று நினைக்க முடியுமா ............?
ReplyDeleteWhy Rauf Hakeem is in Turkey while Huasein is in SL. Is it conspiracy?
ReplyDeleteWhy Rauf Hakeem is in Turkey while Huasein is in SL. Is it conspiracy?
ReplyDelete