கிழக்கு மாகாணம் தனியாகவே இருக்கவேண்டும் - முஸ்லிம் அமைப்புக்கள் அதிரடி தீர்மானத்திற்கு வரவேற்பு
தனியலகு வழங்கினாலும் சரி வழங்கா விட்டாலும் சரி கிழக்கு தனி மாகாணமாகவே இருக்க வேண்டும் என கிழக்கு மாகாண சிவில் அமைப்புக்கள் ஒன்றிணைந்து தீர்மானம் நிறைவேற்றியிருப்பதை உலமா கட்சி வரவேற்றிருப்பதுடன் இதனை கிழக்கு முஸ்லிமிகளின் கோரிக்கையாக அரசு ஏற்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.
இது பற்றி உலமா கட்சி தலைவர் கலாநிதி முபாறக் மௌலவி தெரிவித்ததாவது,
கல்முனை அபிவிருத்திக்கான மன்றம், காத்தான்குடி பள்ளிவாயல் சம்மேளனம், கல்குடா முஸ்லிம் மஜ்லிஸ், திருகோணமலை பள்ளிவாயல் ஒன்றியம் என கிழக்கு மாகாணத்தல் உள்ள புத்திஜீவிகள் சமூக ஆர்வலர்களை கொண்ட அமைப்புக்கள் காத்தான்குடியில் ஒன்றிணைந்து புதிய அரசியல் யாப்பு சீர் திருத்தம், முஸ்லிம் சமூகத்தின் சார்பில் முன் வைக்க வேண்டிய பிரேரணைகள், ஜனாதிபதி முறைமை போன்றவற்றை ஆராய்ந்து அதில் பலவிடயங்களில் ஒரே கருத்தில் ஒற்றுமைப்பட்டுள்ளமை கிழக்கின் வரலாற்றில் துணிச்சலான நடவடிக்கையாகும்.
முஸ்லிம்களின் வாக்குகளை பெற்ற முஸ்லிம் கட்சிகள் தூங்கிக்கொண்டிருக்கும் போது அல்லது தூங்குவது போன்று பாசாங்கு செய்து கொண்டு வெளிநாட்டு சக்திகளின் பணத்துக்கு அடிமையகியுள்ள நிலையில் கிழக்கு மாகாண புத்திஜீவிகளின் இந்த முனைப்பு பெரிதும் பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.
கிழக்கு மாகாணத்தை எக்காரணம் கொண்டும் வடக்குடன் இணைக்கக்கூடாது என்பதே உலமா கட்சியின் நீண்டகால கோரிக்கையாகும். வடக்கும் கிழக்கும் பிரிய வேண்டும் என புலிகள் காலத்திலேயே இந்த நாட்டில் துணிச்சலாக முதலில் கூறியவர்கள் நாமே. அத்துடன் நிறைவேற்று ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படக்கூடாது என்றும் அதில் சில மாற்றங்கள் மட்டுமே தேவை என்பதையும் தொடர்ந்தேர்ச்சியாக உலமா கட்சி வலியுறுத்தி வருகிறது. தற்போது கிழக்கு மாகாண புத்திஜீவிகளும் இது விடயத்தில் ஏகோபித்த முடிவுக்கு வந்துள்ளமை மூலம் பணத்துக்கும் பதவிக்கும் சோரம் போகும் முஸ்லிம் கட்சிகளால் புத்திஜீவிகளை விலை கொடுத்து வாங்க முடியாது என்ற செய்தியை நமக்கு சொல்கிறது.
ஆனாலும் இது விடயத்தில் முஸ்லிம் கட்ச்pகள் ஏதாவது சொல்லி முஸ்லிம்களையும் புத்தி ஜீவிகளில் சிலரையும் குழப்பும் முயற்சிகளையும் மேற்கொள்ளலாம். இது விடயத்தில் கிழக்கு மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்;. முஸ்லிம் கட்சி தலைவர்கள் மேடையில் ஏறி வடக்கு கிழக்கு இணைப்பினால் எற்படும் சாதகங்கள் என்ன தெரியுமா? என எகிறினால் அள்ளாஹு அக்பர் என கோசம் போடும் உற்சாக மடையர்களும் நம்மிடையே அதிகம் இருக்கத்தான் செய்கிறார்கள்.
ஆகவே கிழக்கு மாகாண புத்திஜீவிகளின் மேற்படி ஏகோபித்த தீர்மானத்தை ஒரு ஆவணமாக அரசாங்கம் ஏற்று அதனையே நடைமுறைப்படுத்துவதாக பகிரங்கமாக அறிவிவிக்க வேண்டும் என உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது.
good decision
ReplyDeleteBoss atha neenga sona maddum pooththathu tamil makkalum sollum 13vathu thiruththa saddamum erukku
ReplyDeleteNorth.est .kaddayam.onru.enaiyavendum.north.est.athikamanor.tamil.makkal
ReplyDelete