Header Ads



இஸ்லாமிய வரலாற்றில் நீதி வழங்குவதில், இதுபோன்று பல முன்னுதாரணங்கள்...!

 கடந்த 1990-ல் 'ஹிந்துத்துவ ஏஜென்ட்'டாக செயல்பட்ட அன்றைய கவர்னர் 'ஜக்மோகன்' ஹிந்து

அப்போது, தலைநகர் ஸ்ரீநகரில் 'சக்தி சுவீட்ஸ்' என்ற பெயரில் கடை நடத்திக் கொண்டிருந்த 'சீதாராம் சோகல்' என்ற 'ஹிந்து பண்டிட்' தனது கடையை அப்படியே விட்டுவிட்டு செல்ல நேர்ந்தது.

அப்போது, அந்தக்கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த முஸ்லிம் ஊழியர் ஒருவர், அக்கடையை தொடர்ந்து 'சக்தி சுவீட்ஸ்' என்ற அதே பெயரில் நிர்வகிக்க தொடங்கிவிட்டார்.

25 ஆண்டுகாலத்தில் பல்வேறு ஏற்ற இறக்கங்களை சந்தித்த அந்த முஸ்லிம் ஊழியர், தனது 25 ஆண்டுகால தொடர் உழைப்பின் காரணமாக கடையை விரிவு படுத்தியதுடன் அக்கட்டிடத்தையும் விலைக்கு வாங்கிவிட்டார்.

இந்நிலையில், தற்போது காஷ்மீரில் நிலைமை சீரடைந்து வந்ததையடுத்து, சீதாராம் சோகல் காஷ்மீருக்கு திரும்பும் சூழல் ஏற்பட்டது.

55 வயதில் ஊரைவிட்டு சென்ற 'சோகல்' தனது 80-வது வயதில் மீண்டும் காஷ்மீருக்கு சென்றார்.

இடைப்பட்ட இந்த 25 ஆண்டுகாலத்தில் கடை ஊழியருடன் 'தகவல் தொடர்பு' கூட இல்லாதிருந்த பெரியவர் சோகல், 'சக்தி சுவீட்ஸ்' என்ற தனது கடையை அதே பெயருடன் அதே இடத்தில் பார்த்து பிரமித்துப் போனார்.

தற்போது சக்தி சுவீட்ஸ் கடையை நிர்வகித்து வரும் தனது முன்னாள் ஊழியர் மற்றும் அவரது வாரிசுகளிடம், இது தனக்கு சொந்தமான கடை என உரிமை கோரினார்.

சற்றும் எதிர்பாராத இந்த அதிர்ச்சிகரமான திருப்பத்தால் நிலை குலைந்து போன 'சக்தி சுவீட்ஸ்' கடையின் இந்நாள் நிர்வாகிகள் மற்றும் பெரியவர் 'சோகல்' குடும்பத்தினர் ஆகியோர் இடையே பல கட்ட பேச்சு வார்த்தைகள் நடந்தது.

தாங்கள் பட்ட கஷ்டங்கள், தொழிலை அபிவிருத்தி செய்வதற்காக பெற்றுள்ள கடன்கள், மற்றும் தொழில் தொடர்பான கொடுக்கல் வாங்கல் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை மேற்கோள் காட்டி, பெரியவர் சோகல் குடும்பத்தாரிடம் கடையை ஒப்படைக்க மறுத்து வந்தனர், தற்போதைய முஸ்லிம் நிர்வாகிகள்.

இதையடுத்து ஸ்ரீ நகர் 'லால் சவுக்' பகுதியில் செயல்பட்டு வரும் 'ரீகல் சவுக் டிரேடர்ஸ் அசோசியேஷன்' என்ற வியாபாரிகள் சங்கத்தை அணுகினார், பெரியவர் 'சீதாராம் சோகல்'

இத்தனைக்கும் அந்த சங்கம், பெரியவர் சோகல், காஷ்மீரைவிட்டு வெளியேறிய பிறகு சமீப காலத்தில் தான் தொடங்கப்பட்டது என்பதுடன், தற்போதைய சக்தி சுவீட்ஸ் உரிமையாளர்களான முஸ்லிம்கள் அதில் சங்க உறுப்பினர்களாகவும் உள்ளனர்.

கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பெரியவர் சோகலிடமிருந்து புகார் மனுவை பெற்ற வியாபாரிகள் சங்கம்,

'சக்தி சுவீட்ஸ்' அமைந்துள்ள கடை மற்றும் அதையொட்டியுள்ள (இந்நாள் நிர்வாகிகளின் பெயரில் வாங்கப்பட்ட) நிலம் உள்ளிட்ட ரூ. 25 கோடி மதிப்பிலான தொழில் நிறுவனத்தை முஸ்லிம் நிர்வாகிகளிடமிருந்து மீட்டு, பெரியவர் சோகலிடம் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து கூறிய 'ஹிந்து பண்டிட்' சோகல், வியாபாரிகள் சங்கத்தின் இந்த செயல் தன்னை மெய்சிலிர்க்க வைத்துவிட்டதாக கூறினார்.

ரீகல் சவுக் டிரேடர்ஸ் அசோசியேஷன் நிர்வாகி 'ஃபர்ஹான்' கூறுகையில்:

மாற்று சமூகத்தவருக்கு விட்டுக் கொடுத்து, நீதி வழங்குவதில் ஒரு முன்னுதாரணமாக செயல்படவேண்டும் என்பதை முக்கிய அம்சமாக முன்வைத்து நாங்கள் இம்முடிவை எடுத்தோம் என்றார்.

இஸ்லாமிய வரலாற்றில் நீதி வழங்குவதில் இதுபோன்று பல்வேறு முன்னுதாரணங்கள் உள்ளன என்றார்,அவர்.
பண்டித்துக்களை பகடைக் காயாக்கி, மண்ணின் மைந்தர்களான முஸ்லிம்களின் மீது கட்டவிழ்த்துவிட்ட வன்முறைகள் காரணமாக 'பண்டிட்'கள் காஷ்மீரை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டது.

2 comments:

  1. இல்லாத இராமனின் பெயரை கூறி இந்தியாவின் இறைமைக்கும் வளர்ச்சிக்கும் பெரிய தடையாக இருக்கும் இந்த ஹிந்துத்துவ சனியன்கள் மட்டும் இல்லையென்றால் இன்றைய இந்திய தேசம் உலகில் அதி சக்தி வாய்ந்த நாடாக மாறியிருக்கும்

    ReplyDelete
  2. Our Prophit said "Seek for justice even if it is affect your own blood relations" This is what "ISLAM". Islam is a evaluated path for human kind.

    ReplyDelete

Powered by Blogger.