"திருடர்கள் பிடிக்கப்படுவது குறித்து, நாட்டு மக்கள் அதிக கவனம் செலுத்துகின்றனர்"
காலனித்துவ ஆட்சியாளர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்ற நாடு ஒன்றில் தேசிய ஐக்கியம் இல்லாது போனால், அந்த நாட்டில் எந்த விதமான சுதந்திரமும் ஏற்பட இடமில்லை என நவசமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.
நவசமசமாஜக் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
அனைவரும் இணைந்து இந்த முறை சுதந்திர தினத்தை கொண்டாடியது, சுதந்திரம என்ற வகையிலும் ஜனநாயகம் என்ற வகையிலும் முக்கியமானது.
பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகளிடம் இருந்து சுதந்திரம் பெற்றிருந்தாலும் உண்மையான சுதந்திரத்தை பெற்றுக்கொள்வதில் மிகவும் முக்கியமான நடவடிக்கையான தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்தும் நடவடிக்கை முடங்கி போனது.
தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் செயற்பாட்டு ரீதியான தலைவர்கள் ஒன்றிணைந்து இந்த முறை தேசிய சுதந்திர தினத்தை கொண்டாடினார்கள்.
எதிர்காலத்தில் வரையப்படவிருக்கும் புதிய அரசியலமைப்புச் சட்டத்தின் ஊடாக உண்மையான ஜனநாயக தேசிய ஐக்கியத்தின் மூலம் முன்னோக்கி செல்லும் எதிர்பார்ப்பு அவர்களிடம் இருக்கின்றது எனவும் விக்ரமபாகு கருணாரட்ன குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை நாட்டு மக்கள் தற்போது திருடர்கள் பிடிக்கப்படுவது குறித்து அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். எனினும் இது நாட்டுக்கு பிரதான விடயம் அல்ல. நாட்டின் தேசிய பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா இல்லையா என்பது குறித்து நாட்டு மக்களின் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
தேசிய பிரச்சினைக்கு தீர்வு வழங்காமல், அரசாங்கம் எதிர்பார்க்கும் பொருளாதார அபிவிருத்தி என்ற பயணத்தை மேற்கொள்ள முடியாது என்பதுடன் நிதியுதவிகளையும் முதலீடுகளை பெற்றுக்கொள்ள முடியாது எனவும் கலாநிதி கருணாரட்ன மேலும் தெரிவித்துள்ளார்.

Well said tholar. You are a statesman and not a cheap politician
ReplyDelete