Header Ads



அமெ­ரிக்­க அடி­வ­ரு­டி ஹுஸைன், புலிகளினால் விரட்டப்பட்ட முஸ்லிம் பிர­தே­சங்­க­ளுக்கு செல்­லாது ஏன் - அஸ்வர் கொந்தளிப்பு


-ARA.Fareel-

இலங்­கைக்கு விஜ­ய­மொன்­றினை  மேற்­கொண்­டுள்ள ஐ.நா. மனித உரி­மைகள் ஆணை­யாளர் ஹுஸைன் தனது வட­ப­குதி விஜ­யத்தின் போது  முஸ்லிம்  பிர­தே­சங்­க­ளுக்கு செல்­லாது தமிழ்  பிர­தே­சங்­க­ளுக்கு மாத்­தி­ரமே  சென்­றது முஸ்­லிம்­களைக் கவ­லை­ய­டையச் செய்­துள்­ளது. இது கண்­ட­னத்­துக்­கு­ரி­ய­தாகும் என முன்னாள் அமைச்சர் எ.எச்.எம்.அஸ்வர் தெரி­வித்­துள்ளார்.

ஐ.நா.மனித உரி­மைகள் ஆணை­யாளர் செய்ட் அல்­ஹு­ஸைனின் வட பகுதி விஜயம் தொடர்­பாக ஊட­கங்­க­ளுக்கு வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யிலே மேற்­கு­றிப்­பிட்­ட­வாறு  தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

 தமிழ் ஈழ விடு­தலைப் புலி­களால் முஸ்­லிம்கள் ஆயி­ரக்­க­ணக்கில் வடக்­கி­லி­ருந்து விரட்­டி­ய­டிக்­கப்­பட்­டார்கள். முஸ்­லிம்கள் அன்று விரட்­டி­யடிக்­கப்­பட்ட பகு­திகள் இன்று வேறு  தரப்­பினரால் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. அப்­பி­ர­தே­சங்­களை செய்ட் அல்­ஹுஸைன் பார்­வை­யி­டா­தது பெரும் தவ­றாகும்.

யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட தமிழ் தரப்­பி­ன­ருக்கு வழங்­கப்­படும் சந்­தர்ப்பம் முஸ்­லிம்­க­ளுக்கு  வழங்­கப்­பட்­டி­ருக்க வேண்டும். வடக்கில்  அவர் ஆளு­நரைச் சந்­தித்­தி­ருக்­கிறார்.

முத­ல­மைச்­சரை சந்­தித்­தி­ருக்­கிறார். ஆனால்  முஸ்லிம் தரப்­பினை மறந்­தி­ருக்­கிறார். முஸ்லிம் தரப்­பி­னரைச் சந்­திக்­கா­ததின் பின்­ன­ணியில் வட­மா­காண முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் செயற்­பட்­டாரா? அல்­லது பிர­தமர் ரணில்  விக்­கி­ர­ம­சிங்க செயற்­பட்­டாரா என்­பது தெரி­ய­வில்லை.

அல்­ஹுஸைன் அமெ­ரிக்­காவின் அடி­வ­ரு­டி­யாக வந்­த­தினால் தான் வடக்கில் முஸ்லிம் பிரதேசங்களுக்கு செல்லாது  முஸ்லிம்களைச் சந்திக்காமல் இருந்திருக்கிறாரா என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது.

செய்ட் அல் ஹுஸைனின் இலங்கை விஜயத்தை முஸ்லிம் சமூகம்  கண்டிக்க வேண்டும்.

2 comments:

  1. அஹா பார்டா முஸ்லிங்களை பற்றியெல்லாம் கவலை படுறார்

    ReplyDelete
  2. அடாடடடா! என்ன ஒரு இனப்பற்று பெரியவருக்கு பாருங்கள்..?

    'இனிமேல் அரபு மொழியிலும் தேசியகீதம் பாடக்கேட்பார்கள்' என்று சில நாட்களுக்கு முன்பு ஒருவர் நக்கலடித்ததாரே.. அப்போது எங்கிருந்தாராம் இந்த பெரிசு..?

    ReplyDelete

Powered by Blogger.