Header Ads



மகிந்த சார்பில், ரஞ்சனுக்கு பதிலடி

மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் விமானம் ஒன்றில் நவீன வசதிகளை பொருத்தியதாக பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நேற்று ஊடக சந்திப்பொன்றில் சுமத்திய குற்றச்சாட்டுக்கு முன்னாள் ஜனாதிபதயின் ஊடகப் பிரிவு பதிலளித்துள்ளது.

மகிந்த ராஜபக்சவின் ஊடக செயலாளர் ரொஹான் வெலிவிட்ட சார்பில் ஷேரோன் சமரநாயக்க இந்த அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பயன்பாட்டுக்காக ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் விமான நிறுவனத்தின் புதிய விமானம் ஒன்றில் ஆடம்பர குளியல் அறை, கழிவறை, கட்டில் ஆகியவற்றுடன் கூடிய அறை ஒன்றை நிர்மாணிக்க கூடிய விசேட தளபாடங்கள் 4 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் இறக்குமதி செய்யப்படவிருந்தாகவும்,

அதனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரத்துச் செய்ய முயற்சித்த போதிலும் ஒப்பந்த நிபந்தனைகள் காரணமாக அதனை செய்ய முடியாத காரணத்தினால், ஏற்பட்டுள்ள நஷ்டத்தை நாடு எதிர்நோக்க நேரிட்டுள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்திருந்தார்.

இவ்வாறான நடவடிக்கைகள் காரணமாகவே முன்னாள் ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் மற்றும் சிறைச்சாலைகளுக்கு செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, மகிந்த ராஜபக்ச தனிப்பட்ட பயன்பாட்டுக்காக விமான ஒன்றை கொள்வனவு செய்துள்ளதாக பொய்யான பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது.

தற்போது இந்த கதையை விமானம் ஒன்று பொருத்தும் ஆடம்பர அறையாக மாற்றியுள்ளனர். இவை சாதாரணமாக வணிக விமானங்களில் சில ஆசனங்களை கழற்றிவிட்டு பொருத்தப்படும் முக்கிய பிரமுகர்களுக்கான தளபாடங்களாகும்.

எயார் பஸ் விமானங்களை கொள்வனவு செய்யும் போது இந்த தளபாடங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.

மகிந்த ராஜபக்ச இறக்குமதி செய்திருந்த விமானத்திற்கான ஆடம்பர தளபாடங்கள் அமெரிக்க ஜனாதிபதி மற்றும் புருணை சுல்தான் ஆகியோர் பயன்படுத்தும் தளபாடங்களுக்கு இணையானது என ரஞ்சன் ராமநாயக்க கூறியுள்ளமை முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.

விமானங்களை கொள்வனவு செய்யும் போது வழங்கப்படும் இலவசம் தேவையில்லை என்றால், அதனை நிராகரிக்கும் உரிமை உள்ளது.

தற்போதைய ஆட்சியாளர்களுக்கு இந்த தளபாடங்களை பெற்றுக்கொள்ளும் தேவையே இங்கு உண்மையில் நடந்துள்ள விடயமாகும்.

கொள்வனவு நிபந்தனைகள் காரணமாக அதனை நிராகரிக்க முடியாது என்று அதனை தாம் பயன்படுத்திக்கொள்ள விளக்கத்தை நல்லாட்சி ஆட்சியாளர்கள் உருவாக்கி கொண்டுள்ளதாக எமக்கு தெரிகிறது எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1 comment:

  1. யார் கூறுவது உண்மை யார் கூறுவது பொய் என்பதை காலம் நிச்சயம் காண்பித்துவிட்டுத்தான் நகர்ந்து செல்லும். அதுவரை பொறுத்திருப்போம்!

    ReplyDelete

Powered by Blogger.