இலங்கையிலிருந்து ஹஜ்ஜுக்குச் செல்ல, புதிய வழிமுறை
-ARA.Fareel-
இவ்வருடம் முதல் ஹஜ் ஏற்பாடுகளுக்கு புதிய முறையொன்றினை அமுல்படுத்துவதற்கு ஹஜ் குழு திட்டமிட்டுள்ளது.
கடந்த காலங்களில் நீதிமன்றத்தின் வழிகாட்டல்களுக்கு (GUIDE LINES) அமைவாகவே ஹஜ் குழு தனது ஏற்பாடுகளை மேற்கொண்டு வந்தது.
நீதிமன்ற வழிகாட்டல்களில் பல சவால்கள் ஏற்பட்டதையடுத்தே புதிய முறையொன்று அமுல்படுத்தப்படவுள்ளது.
இந்தப் புதிய முறை ஹஜ் முகவர்களின் ஆதரவினையும் பெற்றுக்கொண்டே வடிவமைக்கப்படவுள்ளது.
இதுதொடர்பாக முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீமின் செயலாளரும் ஹஜ் குழு உறுப்பினருமான எம்.எச்.எம் பாஹிம் விடிவெள்ளிக்கு விளக்கமளிக்கையில் ஹஜ் ஏற்பாடுகளுக்குப் புதிய முறை தொடர்பாக ஹஜ்குழு ஹஜ்முகவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தி வருகிறது.
இதுவரை அனுபவமுள்ள மூன்று ஹஜ் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகள் நடாத்தப்பட்டுள்ளன. ஹஜ்ஜாஜிகளின் ஆலோசனைகளும் எழுத்து மூலம் பெற்றுக்கொள்ளப்படவுள்ளன.
புதிய நடைமுறை வடிவமைக்கும் போது ஹஜ் பயணிகளின் நலனும், முகவர்களின் நலனும் கவனத்தில் கொள்ளப்படவுள்ளன.
தற்போது அமுலிலுள்ள நீதிமன்ற வழிகாட்டல்கள் காரணமாக ஹஜ் ஏற்பாடுகள் பல சவால்களுக்கு உட்படுத்தப்படுவதால் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் நன்மைபயக்கும் வகையில் புதிய நடைமுறை வடிவமைக்கப்படவுள்ளது என்றார்.
Post a Comment