"வசீம் தாஜூடீன் கொலை" நாம் குற்றம் செய்யவில்லை என்பதால், அச்சமடையவில்லை - நாமல்
நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், தனது தந்தையான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, சகோதரர் யோஷித்த ராஜபக்ச மற்றும் தன் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என்பதால், அது பற்றி கணக்கில் எடுக்காது, வழமை போல் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
பிரபல றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூடீன் கொலை சம்பவம் தொடர்பான தாம் கைது செய்யப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
இது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. எனது சகோதரர் யோஷித்த ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்தே நான் தற்போது கவனம் செலுத்தி வருகின்றேன்.
நாங்கள் திருடர்கள், மோசடியாளர்கள் என சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான உணமை, பொய்கள் என்றோ ஒரு நாள் தெரியவரும்.
குற்றம் செய்யவில்லை என்பதால், குற்றச்சாட்டுக்கள் குறித்து அச்சமடையவில்லை எனவும் நாமல் ராஜபக்ச கூறியுள்ளார்.
உங்கள் குடும்ப ஊழல்கள் அரசியல் காய் நகர்த்தல்களுக்காக மட்டுமே கையாளப்படுகின்றன. சுயாதீன நீதிமன்றம் ஒன்றில் விசாரிக்கப் பட்டால், உங்களில் நிறைய பேர் வெலிக்கட மாமி வீட்டில் விருந்து அனுபவிக்க வேண்டி வரும்.
ReplyDelete