ஞானசாரர் தொடர்ந்தும், விளக்கமறியலில் வைக்கப்படுவார்..?
ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் அவமதிக்கும் வகையில் நடந்து கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு நாளையும் பிணை கிடைக்காது எனக் கூறப்படுகிறது.
சிங்கள ராவய தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர், ராவணா பலய அமைப்பின் தலைவர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த பொலிஸார் தவறியுள்ளனர்.
இதனால், விசாரணைகள் முடிவடையவில்லை எனக் கூறி, பிணை வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்க பொலிஸார் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் ஞானசார தேரர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்படுவார் என பேசப்படுகிறது.
மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கி வரும் பொதுபல சேனா அமைப்பு உள்ளிட்ட இனவாத அமைப்புகள் இந்த கைதை அரசியல் பழிவாங்கல் என கூறி வருகின்றனர்.

சட்டம் ஆட்சி செய்கிறது, இங்கே அரசியல் பழி வாங்குதலுக்கு இடமில்லை. SB திசா நாயக்காவுக்கு ஒரு நீதியும் மற்றவருக்கு இன்னொரு நீதியும் இல்லை.
ReplyDelete