மஹிந்த ராஜபக்ஷ அணியில் முஸ்லிம்கள், சேர்கிறார்கள் என்றால் அதை தடுக்கமுடியாது
-ARA.Fareel-
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் பிரிவுக்குள் எவ்வித பிளவுகளுமில்லை. முஸ்லிம்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை வெறுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கரங்களையே பலப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் பிரிவின் தலைவரும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்துக்குமான இராஜாங்க அமைச்சருமான ஏ.எச்.எம். பௌஸி தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் பிரிவு மஹிந்த ராஜபக்ஷ அணி மைத்திரிபால சிறிசேன அணி என பிளவுபட்டுள்ளதாக பரப்பப்பட்டு வரும் செய்தியை மறுத்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே பதவியில் இருக்கிறார். முஸ்லிம்கள் எப்போதும் தலைமைத்துவத்துக்கு கட்டுப்பட்டவர்களாகவே இருப்பார்கள். இதனையே மார்க்கமும் வலியுறுத்துகிறது. முஸ்லிம்களுக்கு உரிய பாதுகாப்பும், மத உரிமைகளையும் மைத்திரிபால சிறிசேனவினால் மாத்திரமே வழங்க முடியும்.
கடந்த மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான பல நடவடிக்கைகள் இனவாத குழுக்களால் முன்னெடுக்கப்பட்டன. அன்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் நாம் இக்கட்டான நிலையிலேயே இருந்தோம்.
முஸ்லிம்கள் அன்று மஹிந்த ராஜபக் ஷ மீது வெறுப்படைந்தனாலேயே அவரை பதவியிலிருந்து அகற்றுவதற்குப் பங்காளர்களாக செயற்பட்டார்கள். மைத்திரிபால சிறிசேன மீது நம்பிக்கை வைத்து அவரை ஜனாதிபதியாகத் தெரிவு செய்தார்கள். முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு அங்கீகாரம் வழங்கிக் கொண்டிருந்த அன்றைய ஜனாதிபதியின் பக்கம் முஸ்லிம்கள் ஒருபோதும் சேர்ந்து கொள்ளமாட்டார்கள்.
முஸ்லிம்கள் மஹிந்த ராஜபக் ஷவின் அணியில் சேர்ந்து கொள்ளப்போகிறார்கள் என்றால் அதைத் தடுக்கவும் எம்மால் முடியாது. முஸ்லிம்களில் ஒரு சிலர் மஹிந்தவை ஆதரிக்கிறார்கள் என்பதற்காக முஸ்லிம்கள் அணி அணியாக மஹிந்தவின் பக்கம் சேர்கிறார்கள் என அறிக்கைவிட முடியாது.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் பிரிவு கட்சியின் முன்னாள் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களையும் தற்போதைய பதவியில் உள்ள உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களையும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களையும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஒன்று கூட்டி எதிர்கால அரசியல் நிலைமை தொடர்பில் விளக்கங்களை வழங்குவதற்குத் திட்டமிட்டுள்ளது என்றார்.
சேர் மன்னிக்கவும்.உங்கள் சுய நல அரசியலுக்காக.மார்க்கத்தை அரசியலில் கலக்க வேண்டாம்.மார்க்கத்தில் சாெ ல்லப் பட்டுள்ளது ஒற்றுமையாக இருக்கும் படி.ஆனால் நீங்கள் முஸ்லீம் சமுகத்திற்கு என்ன செய்துள்ளீர்கள்.
ReplyDelete