சிங்கள சமூகம் போன்று, ஏனைய சமூகங்களும் உரிமைகளை அனுபவிக்க வேண்டும் - சந்திரிக்கா
நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்துக்கான சிங்கள சமூகம் தமது அதிகாரங்களை ஏனைய சமூகங்களுடன் பகிர்வதில் தவறில்லை என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
அரசாங்க செய்தித்தாளுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதிகார பரவலாக்கம் என்பது சிங்கள மக்களுடைய அதிகாரங்களை குறைப்பது என்று அர்த்தமல்ல. மாறாக அவர்களை போன்று ஏனைய சமூகங்களும் உரிமைகளை அனுபவிக்க வேண்டும் என்பதே அர்த்தமாகும் என்று சந்திரிக்கா குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் 2000ஆம் ஆண்டு தமது அரசாங்கம் முன்கொணர்ந்த தீர்வு திட்டத்தை விட முன்னேற்றமான தீர்வு திட்டம் ஒன்றை முன்கொணர தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது என்று சந்திரிக்கா தெரிவித்துள்ளார்.
அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளிலும் இந்த நோக்கை கொண்டு அரசாங்கம் செயற்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மஹிந்த ராஜபக்சவை பொறுத்தவரையில் அவர் முன்னாள் பிரதமர் ஸ்ரீமோவோ பண்டாரநாயக்கவை பதவியில் இருந்து அகற்ற முன்னின்று செயற்பட்டவராவார். எனவே அவர் கட்சிக்கு எதிராக செயற்படுவது முதல் தடவையல்ல என்று சந்திரிக்கா தெரிவித்துள்ளார்.
Post a Comment