Header Ads



சிறுபான்மையினரின் பிரச்சினைகள், இந்த நல்லாட்சியில் தீர்க்கப்படும் நிலையைக் காணவில்லை - அமீர் அலி

நல்லாட்சி என்ற பெயரும் பேப்பரும் தான் விற்கப்படுகின்றதே தவிர அது செயற்பாட்டில் இல்லை என பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார்.

காத்தான்குடியில் சாதனையாளர் கௌரவிப்பு வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். காத்தான்குடி சென்றல் லைட் மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் சட்டத்தரணி ஏ.முகம்மட் றூபி தலைமையில் நடைபெற்ற இந்த வைபவம் இடம்பெற்றுள்ளது. இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

எதிர்கால அரசியல் நிலைமை, முஸ்லிம்களுக்கு சவால் மற்றும் பிரச்சினைகள் நிறைந்ததாக காணப்படும். தமிழ் மக்கள் ஓரங்கட்டுப்பட்டு முஸ்லிம்களை ஏமாற்ற வைக்க எடுக்கப்படும் நடவடிக்கை தொடர்பில் சிறுபான்மை சமூகங்கள் மிகவும் கவனமாக நடந்து கொள்ள வேண்டும்.எதிர்வரும் அரசியல் நிலைமையில் தமிழர்களும், முஸ்லிம்களும் ஒற்றுமைப்படவில்லையென்றால் இரண்டு சமூகங்களும் ஏமாற்றப்பட்டு விடும் என்ற அச்சம் இன்று ஏற்பட்டுள்ளது.

எதிர்கால அரசியலில் 20ஆவது திருத்தமென்பது சிறுபான்மையினரை தோலுரிக்கின்ற விடயம் என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

இந்த நாட்டில் வாழுகின்ற தமிழ், முஸ்லிம் மக்களுடைய தோல்களை உரிக்கின்ற சட்டமாக அந்த 20ஆவது திருத்தம் வரவுள்ளது என நான் நினைக்கின்றேன்.

சிறுபான்மை சமூகங்களை மீண்டும் குழப்பியடிக்கின்ற விடயமாக இது இருக்கலாமென்ற அச்சமும் இல்லாமலில்லை.

ஏற்படவுள்ள அரசியல் யாப்பு தொடர்பில், கற்றவர்கள் ஆலோசனை சொல்ல வேண்டும். வெறுமனே வீதிகளிலோ அல்லது கடற்கரையிலோ பேசித்திரிகின்றவர்களாக இருக்காமல் அரசியல் தலைவர்களுக்கு ஆலோசனைகளை கூறவேண்டும். எல்லோரும் இதற்கு பங்களிப்புச் செய்ய வேண்டும். சிறுபான்மை சமூகங்களின் பிரச்சினைகள் இந்த நல்லாட்சியில் தீர்க்கப்படும் நிலையைக் காணவில்லை.

ஆளும் தரப்பும், எதிர் தரப்பும் கீரியும் பாம்புமாக 28 வருடங்கள் இருந்த நிலையில் இன்று ஒரே வரிசையில் இருந்து தீர்மானங்கள் எடுப்பதென்பது சாத்தியப்படக் கூடிய விடயமல்ல. இது சவாலுக்குரிய விடயமாகும்.

எனினும் ,இங்கு நல்லிணக்கமும் தீர்வும் வரவேண்டுமாக இருந்தால் எல்லோரும் தியாகம் செய்தே ஆகவேண்டும்.

எதிர் காலத்தில் இடம்பெறவுள்ள வட்டார பிரிப்பு நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபை தேர்தலில் வடக்கு கிழக்கிலே இருக்கின்ற முஸ்லிம்களுக்கு பிரச்சினை இல்லை என்றாலும் வடக்கு கிழக்குக்கு வெளியில் வாழுகின்ற முஸ்லிம்களுக்கு பிரச்சினை இருக்கின்றது.

அவர்களுக்கு சில பிரதேசங்களில் மாகாண சபை உறுப்பினரை பெறமுடியாது. சில பிரதேசங்களில் பாராளுமன்ற உறுப்பினர்களை பெற முடியாது.

ஒரு முஸ்லிம் பிரதேச சபை உறுப்பினரையாவது பெற்றுக் கொடுக்கின்ற போராட்டத்தை மேற்கொள்ளும் காலகட்டத்தில் நாம் இருக்கின்றோம்.

சில முஸ்லிம் பிரதேசங்களை ஊடறுத்து துண்டாப்பட்டு ஒரு முஸ்லிம் பிரதேச சபை உறுப்பினரையும் பெற்றுக் கொள்ள முடியாத நல்லாட்சியில் தர்ம சங்டமான நிலையில் நாம் இருந்து கொண்டிருக்கின்றோம்.

எங்களை தொடச்சியாக வன்முறையாளர்கள், பிரச்சினைக்குரியவர்கள் என்ற பெயரை எமது சமூகத்திற்கு சூட்டி விடக் கூடாது என்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

பல்கலைக்கழக வாழ்க்கையை ஒவ்வொருவரும் சவாலாக எடுத்துக் கொள்ளுங்கள் பட்டம் பெற்றால் கடமை முடிந்து விட்டது என நினைத்துக் கொள்ளாதீர்கள்.

இந்தப் பிரசேத்திலிருந்து 73 பேர் பட்டதாரிகளாக போகின்றீர்கள் இதில் 5பேர் மருத்துவத்திற்கும் 4பேர் பொறியியலுக்கும் ஏனையவர்கள் மற்றைய துறைகளுக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளீர்கள்.

எத்தனையோ துறைகள் உள்ளன. அதனை தேடுங்கள் வெறுமனே ஒரு பட்டதாரியாக மட்டும் வந்து வீட்டிலிருந்து தொழில் தேடாமல் ஏனைய துறைகளையும் தேடி கல்வியை தொடருங்கள் சமூகத்தில் உயர் நிலையை அடைய முயற்சியுங்கள். மட்டு மாவட்டத்தில் எங்குமே பட்டதாரிகளுக்கு தற்போது வெற்றிடமில்லை எனவும் இதன்போது, தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. திருமணம் முடிக்கும் முன் சிந்திக்கவேண்டிய விடயத்தினை முடித்து ஒருவருடம் கடந்தபின் மணைவிசரியில்லை மாமியார் வீடு சரியில்லை என்று திருமணத்திற்கு வந்தவர்களிடம் சொல்லி ஒப்பாரி வைப்பதில் என்ன பயணாம் கேட்டுபெற்றுக்கொடுக்கவேண்டியது உங்க பொருப்பு சார் இப்படி கைநலுவினால் எப்படி???

    ReplyDelete
  2. அங்க சுத்தி இங்க சுத்தி உங்க ஆசணத்திக்கு வரப்போகும் ஆபத்தை மட்டுமே கவலைப்படுவது தெழிவாத் தெரிகிறது

    ReplyDelete

Powered by Blogger.