Header Ads



யாழ்.பல்கலைகழகத்தில் ஆடை ஒழுங்கு இரத்து - சிங்கள மாணவி மீது, கோழைகள் தாக்குதல்

யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் சிங்கள மாணவி இனந்தெரியாத இளைஞர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

யாழ் பரமேஸ்வரா சந்தியில் இடம்பெற்ற இத்தாக்குதலில் மாணவி அப்பகுதியில் டெனிம் மற்றும் ரீசேட்டுடன் சென்று கொண்டிருந்த போதே இத்தாக்குதல் இடம்பெற்றதாகத் தெரியவருகின்றது. மாணவி பொலிசாருக்கு தெரிவித்ததை அடுத்து உடனடியாக அப்பகுதியில் பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளிக் கிழமைகளில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கலாச்சார ஆடை அணிந்து வருவது ஆமுலாக்கப்பட்டபின் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கலாச்சார ஆடை அணிவதை குழப்புவதற்காக விசமிகள் மேற்கொண்ட நடவடிக்கையாக இது இருக்கலாம் என பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2 comments:

  1. ஏழைத்தமிழர்களுக்கு இருக்கும் மீதமுள்ள அமைதியையும், பாதுகாப்பையும் இல்லாமல் செய்ய பார்க்கிறார்கள்.
    முட்டாளுக்கு பட்டும் இன்னம் விழங்கியபாடில்லை.

    ReplyDelete
  2. இவர்கள் பட்ட அடி இன்னும் போதாதுபோல் உள்ளது,அப்பாவித்தமிழ் மக்கள் நிம்மதியாக வால விட மாட்டார்கள் இந்த இனத்துவேசம் பிடித்த காளைகள்.

    ReplyDelete

Powered by Blogger.