Header Ads



"தென்கிழக்கு பல்கலைகழகத்தின் நிலை.."


- S.Shafnas-

திங்களன்று தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா தொடர்பான கட்டுரையொன்று பதிவாயிருந்ததை அவதானித்தோம்.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவை கொழும்பில் நடத்தாது பல்கலைக்கழக வளாகத்திலேயே நடத்துமாறு மாணவர்கள் மட்டுமல்லாது பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளதாகவே செய்தி வெளியாகியது. இக்கோரிக்கை உன்மையிலேயே யாரால் முன்வைக்கப்பட்டது என்பது கேள்விக்குறியான விடயமாகும்.

ஏனெனில் இக்கோரிக்கையின் பிரதிகளோ, யாரால் யாருக்கு சமர்ப்பிக்கப்பட்டது என்பது பற்றியோ பதியப்படவில்லை.

இதன் பின்னனியை ஆராய்ந்தால் இக்கோரிக்கை அம்பாறை மாவட்ட மானவர்களது மற்றும் பெற்றோர்களது கோரிக்கை மட்டுமே என்பதை தெளிவாக அவாதானிக்க்கூடியதாக உள்ளது.

வரலாற்றை நோக்குவோமெனில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா கொழும்பிலேயே நடத்தப்பட்டு வந்தது யாரும் அறிந்த விடயமாகும். ஆனால் கடந்த இரண்டு மூன்று வருடங்களாக முன்னாள் உபவேந்தரும் தற்போதைய லக்சல நிறுவனத்தின் தலைவருமான இஸ்மாயில் அவர்களின் தலைமையில் பல்கலைக்கழக வளாகத்திலேயே நடத்தப்பட்டது.இது இவ்வாறான கோரிக்கைக்கு செவிசாய்த்தே நடத்தப்பட்டது என்பது யாவரும் அறிந்த விடயமாகும்.

இது இவ்வாறு நடத்தப்பட்டதற்கான பின்புலமாக இஸ்மாயில் அவர்களின் அரசியல் தூர நோக்கே என்பது கடந்த பாராளுமன்ற தேர்தலில் இஸ்மாயில் அவர்கள் அம்பாறை மாவட்டத்தில் மயில் சின்னத்தில் போட்டியிட்டபோதே அனைவரும் உணர்ந்தனர்.

இக்கோரிக்கைக்கு நியாயமான காரணங்களாக பல்கலைக்கழகத்தில் போதுமானவசதிகள் இருக்கின்றது எனவும் பெற்றோர்கள் பெருந்தொகை பணத்தை செலவு செய்து சிரமப்பட்டு கொழும்பு செல்லவேண்டியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறெனில் தென்கிழக்குபல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழகத்தை அன்டிய பிரதேசத்தில் உள்ள மாணவர்கள் மட்டுமா கல்வி கற்கின்றனர்?

ஏனைய தூர பிரதேச மாணவர்கள் இப்பல்கலைகழகத்தில் கல்வி கற்கவில்லையா? தூர பிரதேச மாணவர்கள் எவ்வளவு பெருந்தொகை பணத்தை தமது கற்கை காலத்தில் செலவழித்திருப்பர்.
அவர்களது பெற்றோர் பல்கலைக்கழகத்தில் மாணவர்களை பதிவு செய்யும்போதும் உத்தியோகபூர்வமாக பல்கலைக்கழகத்தில் இணைக்கும்போதும் சிரமப்பட்டு தென்கிழக்கை நோக்கி வரவில்லையா?

இக்கோரிக்கை விடுத்தவர்கள் ஒரு நாள் மாத்திரமே சிரமத்தையும் செலவையும் அனுபவிக்க வேண்டியுள்ளனர். ஆனால் ஏனைய தூர பிரதேச மாணவர்கள் 4,5 வருடங்கள் சிரமப்பட்டு செலவு செய்து தென்கிழக்கை நோக்கி வரவில்லைய?

கடந்த பதிவில் சுமார் 700 மாணவர்கள் பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறெனில் சுமார் 500 மாணவர்கள் இக்கோரிக்கையினை விடுத்திருப்பார்களா என்றால் நிச்சயமாக இல்லை. ஏனெனில் தற்போது தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் தென்கிழக்கை அன்டிய பிரதேச மாணவர்களைவிட தூர பிரதேச மாணவர்களே அதிமாக உள்ளனர். இவையனைத்தும் இவ்வாறிறுக்க கடந்த பட்டமளிப்பு விழாவின்போது பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் எவ்வாறான சிரமங்களுக்கு முகங்கொடுத்தனர் என்பது பற்றி விசனக் கட்டுரையொன்று பட்டமளிப்பு விழா முடிந்து ஒரு வாரத்தில் jafna muslim இணையத்தளத்திலேயே பதிவாயிருந்ததை நாம் மறந்து விடக்கூடாது.

இவ்வாறாக நியாயமான காரணங்கள் அவ்வாறிறுக்க இவ்வாறான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதா என்பது பற்றி சிந்திக்க வேண்டியுள்ளது.

எவ்வாறிருப்பினும் பல்கலைக்கழகத்தின் தற்போதைய நிர்வாகத்திடம் அரசியல் தூர நோக்கு செயற்பாடுகள் எதுவும் இருக்காது எனும் ஊகத்தில் பட்டமளிப்பு விழா தீர்மானித்தபடி கொழும்பிலேயே நடைபெறுமென நிச்சயப்படுத்திக்கொள்ளலாம்.

1 comment:

  1. Stop quarelling over petty issues.It is like weather to break the egg by the broad end or narrow end.If the senate of the university decides to have the function within the university premises let us support them.Let us forget our regional politics. It is a curse among the politicos of the muslim community to take daggers at every issue. Who is behind this?

    ReplyDelete

Powered by Blogger.