அகதிகளின் பிரச்சனையை தத்ரூபமாக விளக்கிய திரைப்படம் - சிறந்த படத்திற்கான விருது பெற்றது
ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் கோரி வரும் அகதிகள் எதிர்க்கொள்ளும்
பிரச்சனைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம் ஒன்று ஜேர்மனியில்
’சிறந்த படத்திற்கான உயரிய விருதினை’ பெற்று சாதனை படைத்துள்ளது.
ஜேர்மன் தலைநகரான பெர்லினில் நேற்று 66-வது திரைப்பட விழா கோலாகலமாக நடந்துள்ளது.
இந்த விழாவில் பல்வேறு கதை அம்சங்கள் உடைய பல மொழி திரைப்படங்கள் திரையிடப்பட்டன.
எனினும், அகதிகளின் பிரச்சனைகளை தத்ரூபமாக விளக்கிய திரைப்படம் ‘சிறந்த படத்திற்கான Golden Bear என்ற விருதினை பெற்றுள்ளது.
’Fire at Sea’(கடலில் எரியும் நெருப்பு) எனப்பெயரிடப்பட்ட அந்த
திரைப்படத்தில் மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பாவில் குடியேற வந்து
உயிரிழக்கும் அகதிகளின் பிரச்சனைகளை எடுத்துரைக்கிறது.
ஜேர்மனியில் கடந்த 13ம் திகதி வெளியான இந்த திரைப்படத்தை Gianfranco Rosi என்பவர் இயக்கியுள்ளார்.
இந்த ஆவண திரைப்படம் சிறந்த படத்திற்கான விருதினை பெற்றது குறித்து
இயக்குனர் பேசியபோது, ‘ஐரோப்பாவில் குடியேற மத்திய தரைக்கடல் வழியாக வந்து
உயிரிழக்கும் ஆயிரக்கணக்கான அகதிகளின் சூழ்நிலை என்னை மிகவும்
பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது.
உயிர் வாழ்வதற்காக ஒரு நாட்டில் இருந்து தப்பி மற்றொரு நாட்டில் குடியேற
வரும்போது உயிரிழப்பது என்பது கொடூரமானது. இதனை ஏற்றுக்கொள்ளவும்
முடியாது.
அகதிகளின் பிரச்சனை குறித்து உலக நாடுகளுக்கும் பொதுமக்களுக்கும்
விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த திரைப்படத்தை எடுத்ததாக தெரிவித்துள்ளார்.
Post a Comment