Header Ads



மகிந்தவுக்கு எனது, வேலையை காட்டுவேன் - மைத்திரி அதிரடி

மஹிந்த ராஜபக்ஸவின் செயற்பாடுகள் தொடர்பில் என்னிடம் அழுது புலம்பி விமர்சனங்களைத் தொடுத்தவர்களே இன்று அவர் பின்னால் வலம் வருகின்றனர்.

புதிய கட்சி ஆரம்பித்தால் ஆரம்பிக்கட்டும். எனது வேலையை நான் காட்டுகின்றேன். அவர்கள் பாற்சோறு சமைத்த பிறகு நான் காரமான கட்டசம்பலை தயாரித்து வழங்குவேன். என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சீறிப் பாய்ந்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நேற்று 12 நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மஹிந்த தரப்பினர் ஆரம்பிக்கவுள்ள புதிய கட்சி பற்றியும் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதன்போதே கடும் சீற்றத்துடன் ஜனாதிபதி மேற்படி கருத்தை முன்வைத்துள்ளார்.

ஜனாதிபதியின் இந்தக் கருத்துக்குப் பாராட்டுத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, புதிய கட்சி உதயமானால் சுதந்திர கட்சியின் பதிலடி கடுமையாக இருக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம  கடும் ஆட்சேபனையை வெளியிட்டார். "தேசிய அரசுடன் இணைந்து செயற்பட முடியாது. இதற்கு மக்கள் ஆணை வழங்கவில்லை. எனவே, சுயாதீனமாக செயற்படுவதற்கு சுதந்திரமளிக்கப்படவேண்டும்'' என்ற தர்க்கத்தை முன் வைத்தார்.

"அவ்வாறு இல்லை. தேசிய அரசில் இணைந்து செயற்படுவதற்கு சுதந்திர கட்சி மத்தியசெயற்குழு ஒப்புதல் வழங்கியுள்ளதுதானே'' என்று வெல்கமவுக்கு பதிலடி கொடுத்தார் ரெஜினோல்ட் குரே.

7 comments:

  1. கூட இருந்து அப்பம் சாப்பிட்ட எனக்கு சம்பல் போடுவது ஒன்றும் பெரியவிடயமல்ல சும்மா அதிருதில்ல......நான் ஒரு வரி சொன்னா ஒரு வருடம் ஆட்சி செய்தமாதிரி...மைதிரி,,,வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. "மகிந்தரே, நானும் நீங்களும் ஒரே கட்சிக்குள் வளர்ந்தவர்கள்தான்... உங்களுக்குள்ளே உறுமியபடி உலாவிக்கொண்டிருக்கும் அடிபட்ட சிங்கம் எனக்குள்ளே தூங்கிக்கொண்டிருக்கிறது என்பதுதான் ஒரே வேறுபாடு. அதைத் தயவு செய்து எழுப்பி விட வேண்டாம்!"

    (உபயம்: தேவர் மகன் கமல்)

    ReplyDelete
  3. 'மகிந்தரே, நானும் நீங்களும் ஒரே கட்சிக்குள் வளர்ந்தவர்கள்தான்... உங்களுக்குள்ளே உறுமியபடி உலாவிக்கொண்டிருக்கும் அடிபட்ட சிங்கம் இந்த மைத்திரிக்குள்ளே தூங்கிக்கொண்டிருக்கிறது என்பதுதான் ஒரே வேறுபாடு. அதைத் தயவு செய்து எழுப்பி விட வேண்டாம்!'

    (உபயம்: தேவர் மகன் கமல்)

    ReplyDelete
  4. " Neeyum naanuma , kanna neeyum naanuma
    Kaalam maarinaal Gowravam maaruma ? "

    ReplyDelete
  5. Sakkpoadu poadu raja ,un kaattula malai peyyuzu
    sattappadi thottup pesu , nee bayanthal ennavazu .

    ReplyDelete
  6. I like கட்ட சம்பல் .

    ReplyDelete
  7. எவனிடம் மாட்டினாலும் மவனே பொலன்னறுவையானிடம் மாட்டிராத

    ReplyDelete

Powered by Blogger.