Header Ads



'தாடிக்கு தடை' என்ற சுற்றுநிருபத்தினால், முஸ்லீம் மாணவர்களிடையே குழப்பநிலை

-பாறுக் ஷிஹான்-

யாழ் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதியினால் தற்போது வெளியிடப்பட்டுள்ள சுற்று நிருபத்தினால் பல்கலைக்கழக  முஸ்லீம் மாணவர்கள் மத்தியில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தில் உள்ள கலைப்பீடங்களில் உள்ள துறைத்தலைவர்களுடனான சந்திப்பினை அடுத்து மேற்படி சுற்று நிருபத்தை கலைப்பீடாதிபதி வெளியீட்டுள்ளார்.

இச்சுற்று நிருபத்தில்  மாணவர்களுக்கு ஒழுங்கு விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

மாணவர்கள் மற்றும் கல்வி சார் உத்தியோகஸ்தர்கள் டெனிம் மற்றும் ரி-சேர்ட் என்பவற்றை விரிவுரை நடைபெறும் நேரத்தில் அணிந்து இருப்பதை தவிர்த்தல்.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் பெண்கள் சேலை அணிந்து விரிவுரைகளில் பங்கேற்க வேண்டும்.

தாடியுடன் விரிவுரைக்கு சமூகமளிக்க கூடாது. ஆகிய கட்டுப்பாடுகள் புதிதாக அறிமுகப்படுத்த ப்பட்டு உள்ளன.

யாழ்.பல்கலைகழக பேரவையின் அறிவுறுத்தலுக்கு அமைய அனைத்து மாணவர்களினதும் உடை ஒழுங்குகள் பற்றி கடந்த 16ம்  திகதி துறை தலைவர்களுக்கு இடையிலான கூட்டத்தில் ஆராயப்பட்டு குறித்த ஒழுங்கு விதிகள் கட்டுப்பாடுகள் விதிப்பதென தீர்மானங்கள் எடுக்கப்பட்டு உள்ளன.

அத்துடன் இப்பல்கலைக்கழகத்தில் முஸ்லீம் சிங்கள மாணவர்கள் கல்வியினை தொடர்கின்றனர். இவர்களில்  சுமார் 500க்கு அதிகமான முஸ்லீம் மாணவ மாணவியர்கள் கலைப்பீடத்தில் பல்வேறு துறைகளில்  உள்ளனர்.

முஸ்லீம் மாணவர்களிற்கு என முஸ்லீம் மஜ்லீஸ் என்கின்ற அமைப்பு இருக்கின்றது.

இவ்வமைப்பு தற்போது இவ்விடயம் தொடர்பாக கலந்துரையாடல் ஒன்றினை சம்பந்தப்பட்ட நிர்வாகத்துடன் கதைக்க உள்ளதாக அறியத்தந்துள்ளனர்.

1 comment:

  1. குறித்த சுற்றுநிரூபம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புகழின் மீதும் அதன் தொண்மையான வரலாற்றின் மீதும் படிகின்ற ஒரு அழுக்குக் கறை.

    ReplyDelete

Powered by Blogger.