Header Ads



சரியான குடும்ப கட்டுப்பாட்டு முறையை, பின்பற்றுமாறு அறிவிப்பு

இந்த நாட்டு மக்கள் தொகையில் அதிகமானோர் சரியான குடும்ப கட்டுப்பாட்டு முறையை பின்பற்றுவது இல்லை என சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது.

புள்ளி விபரப்பட்டியலின் படி, பெண்கள் நூற்றுக்கு 45 சதவீதமானோர் சரியான குடும்ப கட்டுப்பாட்டு முறையை பின்பற்றுவது இல்லை எனவும் தெரிவந்துள்ளது.

கடந்த இரண்டு வருடத்தில் 150 மகப்பேறு இறப்புக்கள் இடம் பெற்றுள்ளன.

கர்ப்ப காலத்தில் சரியான முறையில் உடல் உறவு கொள்ளாமை காரணமாக  பல பெண்கள் இறக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இதனால் குடும்ப கட்டுப்பாட்டு முறை அல்லது இனப்பெருக்க சுகாதார பிரச்சினைகள் உள்ளோர் குடும்ப சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளை பெற்றுகொள்ளுமாறு பொது மக்களுக்கு சுகாதர அமைச்சு அறிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.