Header Ads



பொலன்னறுவை - முஸ்லிம் கொளனி அரிசி ஆலைகளினால், மக்களுக்கு பெரும் தொல்லை

அஸ்ஸலாமு அலைக்கும்

பொலன்னறுவை, முஸ்லிம் கொளனி அன்சர் மாத்தையில் அமைந்துள்ள அரிசி ஆலைகளினால் பிரதேச மக்களுக்கு பெரும் தொல்லை

இங்குள்ள பாரிய தொழிற்சாலைகளோடு போட்டியிட்டு தொழில் செய்ய முடியாத தொழில் அதிபர்கள் தற்போது மாற்று வழியில் இறங்கி உள்ளனர். அரிசி உற்பத்திக்கு பதிலாக பாரிய ஆலைகளில் ஒதுக்கப் படுகின்ற பதர் நெல்களை கொண்டு வந்து விலங்கு உணவு தயாரிக்கும் வழி முறையே அது. எனினும் இது பிரதேச மக்களின் இயல்பு வாழ்க்கைய பெரிதும் பாதித்துருகிறது. 

இத் தொழிற்சாலைகள் மக்கள் நெருங்கி வாழ்கின்ற இடங்களில் அமைந்துள்ளதால் அதன் கழிவு நீரினால் துர் நாற்றம் , நுளம்பு உற்பத்தி அதிகமாக காணப் படுகிறது. அது மட்டுமல்லாமல் இதனால் வெளிவிடப் படுகின்ற புகையினால் அதிகமபனோர் இழுப்பு நோய் எனப்படும் ஆஸ்த்மாவினால் பாதிக்கப் பட்டு அவதியுறுகின்றனர். 

சமைத்த உணவுகளை திறந்து சாப்படக் கூட முடியவில்லை என்றும். இது தொடர்பாக உரிய அதிகாரிகளுக்கு அறிவித்தும்   எவ்விதப் பயனும் இல்லை எனவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இத் தொழிற்சாலைகள் பிணி ஆய் நிலையம் ( கிளினிக்). பள்ளிவாயல் ஆரம்பப் பாடசாலை என்பவற்றால் சூழுப்பட்டுள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத் தக்கது. உரிய தீர்வு கிடைக்காத போது மக்களால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்த தீர்மானி்துள்ளனர்.

தகவல் அபு அப்துல்லாஹ்

No comments

Powered by Blogger.