கொழும்பில் புதிய மேம்பாலங்களை அமைப்பதற்கு தீர்மானம்
கொழும்பில் நிலவும் வாகன நெரிசலை குறைக்கும் நோக்கில் புதிய மேம்பாலங்களை அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பேஹெலியகொட தொடக்கம் கொழும்பு கோட்டை மற்றும் இராஜகிரிய வரை இந்த மேம்பாலத்தை நிர்மானிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பெருந்தெருக்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சின் செயலாளர் டீ.சீ திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
குறித்த மேம்பாலத்தை நிர்மானிப்பதற்கான சூழல் ஆய்வறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், மேம்பாலத்தினூடாக பெறக்கூடிய நன்மைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய மேம்பாலத்தை நிர்மானிக்கும் பொருட்டு பொதுமக்களின் காணிகள் கையகப்படுத்தப்படாது எனவும் பெருந்தெருக்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார்.
Post a Comment