'"இறந்து போனவர் குறித்து"' மகிந்தவுக்கு சந்திரிக்கா பதிலடி
1989-1990களில் நிலவிய பீதி மீளவும் நாட்டில் ஏற்பட்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அச்சம் வெளியிட்டுள்ளார்.பிரபல நடிகரும், அரசியல்வாதியுமான விஜயகுமாரதுங்கவின் 28ம் ஆண்டு நினைவு நிகழ்வுகளில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளர்.
நக்சலைட் என செய்யாத குற்றத்திற்காக விஜயகுமாரதுங்கவை சிறையில் அடைத்தவர்களுடன் இன்று அவரது மனைவி சந்திரிக்கா இணைந்திருப்பது வருத்தமளிப்பதாகத் தெரிவித்துள்ளார். விஜயகுமாரதுங்கவின் காலத்தைப் போன்று தற்போதும் நாட்டில் ஓர் காலம் உருவாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.அப்போதிருந்த சூழ்நிலைகளுக்கும் இப்போதைய சூழ்நிலைமைகளுக்கும் வித்தியாசம் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகவியலாளர்கள், பௌத்த பி;;க்குகள் உள்ளிட்ட பலரும் அஞ்சியுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.செய்யாத குற்றச் செயல்களுக்காக சிறையில் அடைப்பது ஐக்கிய தேசியக் கட்சியின்ஆட்சிக் காலத்தில் வழமையானதொன்று என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் ஐக்கிய தேசியக் கட்சி சுதந்திரக் கட்சி ஆட்சி நடத்தப்பட்டு வருவதாகவும், விதியின் வசத்தினால் இந்த தவறுகளுக்கு உடந்தையாகவிருக்க நேரிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரபல நடிகரும் அரசியல்வாதியுமான விஜயகுமாரதுங்கவின் இறுதிக் கிரியைகளில் கூட பங்கேற்காத முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, அவரது நினைவு நிகழ்வில் பங்கேற்பது ஆச்சரியமளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
விஜயகுமாரதுங்கவின் இறுதிக் கிரியைகளில் பங்கேற்காத ஒரே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.இவ்வாறான ஓர் பின்னணியில் விஜயகுமாரதுங்கவின் நினைவு நிகழ்வுகளில் பங்கேற்று உரையாற்றியமை ஆச்சரியமளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஸவிற்கும் தமது கணவருக்கும் இடையில் ஆரம்பம் முதலே முரண்பாடுகள் காணப்பட்டதாகவும் இறுதிக் கிரியைகளில் கூட பங்கேற்காதவர் நினைவு நிகழ்வில் பங்கேற்றமை வியப்பை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
Post a Comment