ஞானசாரரை விடுதலை செய்யுமாறு, ஜனாதிபதி மைத்தரிரிக்கு மரண அச்சுறுத்தல்
நீதிமன்றத்தை பகிரங்கமாக அவமதித்த குற்றச்சாட்டில் கலபொட அத்தே ஞானசார தேரர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதன் பின்னர் அவரை விடுதலை செய்யுமாறு இணையத்தளங்களினூடாக மிகவும் கீழ்த்தரமான முறையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களை தூற்றி மரண அச்சுறுத்தல் விடுத்தவர்கள் தொடர்பில் கிடைத்துள்ள முறைப்பாடுகளுக்கேற்ப குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் றுவன் குணசேகர தெரிவித்தார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், “சமூக வலைத்தளங்களினூடாக ஜனாதிபதி அவர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்து அதேபோன்று தகாத வார்த்தைகளைக்கொண்டு தூற்றியவர்கள் ஜனாதிபதி அவர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் காட்சி சமூக வலைத்தளங்களின் ஊடாக வெளியிடப்பட்டுள்ளது.
அது தொடர்பான முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. அம்முறைப்பாடுகள் தற்போது குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. அவ் விசாரணைகளின் பின்னர் குறித்த நபர்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளது” எனக் குறிப்பிட்டார்.
Post a Comment