Header Ads



என்னுடைய பிள்ளைகள், சிங்களவர்களை திருமணம் செய்து கொண்டார்கள் - விக்கினேஸ்வரன்

வடகிழக்கை தாயகமாக கொண்ட தமிழ் மக்களுக்கு அவர்களின் உரித்துக்களை, உரிமைகளை கொடுங்கள் பின்னர் கலப்பு திருமணங்கள் குறித்து நாங்கள் பார்த்துக் கொள்ளலாம். நாங்கள் கலப்பு திருமணங்களுக்கு எதிரானவர்கள் அல்ல. என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருக்கின்றார்.

இலங்கையில் கலப்பு திருமணங்கள் நடக்கவேண்டும். அதன் ஊடாக இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை வளர்க்க முடியும். என வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே அண்மையில் தனது பதவியேற்பு நிகழ்வில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே ஆளுநரின் கருத்துக்கு வட மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் பதில் வழங்கியுள்ளார்.

இன்று 9வது தேசிய ஜம்போறி நிகழ்வு யாழ்.மத்திய கல்லூரி மைதானத்தில் ஜனதிபதி மைத்திரிபால சிறிசேனவால் உத்தியோகபூர்வமாக தொடங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்விலேயே முதலமைச்சர் ஆளுநரின் கருத்துக்கு பதில் கருத்தை தெரிவித்திருக்கின்றார். குறித்த நிகழ்வில் முதலமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,

நாங்கள் கலப்பு திருமணத்திற்கு எதிரான மனப்பாங்கு உள்ளவர்கள் கிடையாது. என்னுடைய பிள்ளைகள் சிங்கள இனத்தவர்களை திருமணம் செய்து கொண்டார்கள். ஆனால் இங்கே அவ்வாறில்லை. வடகிழக்கு தமிழ் மக்களுக்கு கிடைக்காமல் இருக்கின்ற கிடைக்கவேண்டிய அவர்களுடைய உரித்துக்களை உரிமைகளை வழங்குங்கள் அதற்குப் பின்னர் நாங்கள் கலப்பு திருமணங்களைக் குறித்து பேசிக் கொள்ளலாம்,பார்த்துக் கொள்ளலாம்.

மேலும் இங்கே சாரணியர்கள் ஒன்றிணைந்திருப்பதன் ஊடாக எங்களால் சகலவற்றையும் செய்ய முடியும். என்பதை காட்டியிருக்கன்றீர்கள். என முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.