Header Ads



அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படும், சமுகம் ஒன்றின் அழுகுரல்..!

-முஹம்மது ராஜி-

நண்பகல் நேரம் ..

தன்னால் ஆன வரை வெப்பத்தைக் கக்கிக்கொண்டு  எரித்துக்கொண்டு இருந்தது சூரியன் .

வெப்பத்துக்கு அஞ்சி மக்கள் வீடுகளுக்குள் ஒதுங்கிக்கொண்டு இருக்கும் நேரம் என்பதால் வீதிகள் ஆளின்றி காய்ந்து கொண்டிருந்தது.

இருவர் சண்டை பிடித்துக்கொண்டு இருக்கும் சத்தம், கதவுகளை மூடிக் கொண்டு மதிய குட்டித்தூக்கத்தில் இருந்ததால் அநேகருக்குக்கு கேட்க வாய்ப்பிருந்திருக்கவில்லை .

கைகலப்பு சப்தம் காதுகளுக்கு எட்ட கதவுகளை திறந்து வெளியே வருகிரார் மூஸா (அலை ).

பனூ இஸ்ராயீல் குலத்தை சேர்ந்த ஒருவனும் எகிப்தியன் ஒருவனும் சண்டை பிடித்துக்  கொண்டிருக்கிறார்கள் . சண்டையை பிரிக்கும் முகமாக தன் குலத்தவனுக்கு ஆதரவாக எகிப்தியனை தன் தடியால் தள்ளுகிறார் . அந்தத் தள்ளலால் தளர்ந்து போய் சுருண்டு  வீழ்கிறான் அந்த  எகிப்தியன் .

ஒரு கணம் அமைதி ...

வீழ்ந்தவனின் மூச்சை விழுந்த கணத்திலே பிரிந்தது போய் இருந்தது .

அங்கு வேறு யாருமே இல்லை .வேறு வேறாக பிரிந்து ஓடுகிறார்கள் மூஸா (அலை ) அவர்களும் அநத  பனூ இஸ்ராயில் குலத்தவனும்....

யார்  அந்த எகிப்தியனை கொண்டார்கள் என்ற ஆதாரம் இல்லாததால் விசாரணை பிசுபிசுத்துப்போகிறது ...

மறுநாள் விடிகிறது ...

மீண்டும் அதே நேரம் இன்னொரு கைகலப்பு சத்தம் .
அநீதிகளை பார்த்துக்கொண்டு இருக்க முடியாத பண்பை தன்னக்கத்தே கொண்ட மூஸா ( அலை )மீண்டும் வெளியே வருகிறார் . முதல் தினம் சண்டையிட்டுக்கொண்டிருந்த அதே பானூ இஸ்ராயில் நபர் இன்னொரு எகிப்தியருடன் சண்டை பிடித்துக்கொண்டு இருந்தான் .

"இவன் பிரச்சினைக்குரிய ஆளாக இருக்க வேண்டும்  . இதே நபர் நேற்றும் சண்டையிட்டான் இன்றும் சண்டை இடுகிறான் "என்று தனக்குள்ளே கூறிக்கொண்ட மூஸா ( அலை ) தன் தடியோடு சண்டை நடக்கும் இடத்தை நோக்கி நடக்கிறார் ..

இதயத்தை அச்சம் நிறைக்க உரத்த   சப்தத்துடன் இப்படிக் கத்துகிறான் பானூ இஸ்ரவேலன் .

"மூஸாவே நேற்று எகிப்தியனை உமது  தடியால் கொன்றது போல இன்று என்னை கொன்று விடாதீர் ..." 
உரத்துக்கத்தியது மட்டுமில்லாமல் அவ்விடத்தை விட்டும் ஓடி விடுகிறான் ..

அவ்வளவுதான் ....

எகிப்தியனை கொன்றது மூஸாதான் என்ற செய்தி எகிப்து முழுக்கப் பரவுகிறது .இதனாலேயே மூஸா (அலை) எகிப்தை விட்டு வெளியேறவேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது ..

அது அல்லாஹு த ஆலா புனித குர் ஆனில் கூறிய உண்மைக்கதை ..

தனக்காக உதவி செய்த ஒருவனையே காட்டிக்கொடுக்கும் ஒருவன் எப்படிப்பட்டவனாக இருப்பான் ? அவன் அங்கம் வகிக்கும் சமூதாயம் எப்படிப்பட்டதாக இருக்கும் .?

நீண்ட காலமாக அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு வரும் ஒரு சமுதாயம்  கடும் சுயநலம் மிக்கதாகவும் , ஓழுக்கம் மற்றும் பண்பாடு அற்றதாகவும் 'நான் மட்டுமே ..' என்ற எண்ணம் கொண்டதாகவும் , 
காட்டிக்கொடுக்கும் சமுதாயமாகவும் 
இருக்கும் என்பதை இந்த சம்பவம் உணர்த்தி நிற்கிறது ..

நீண்ட காலமாக அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு வரும் ஒரு சமுதாயம்  கடும் சுயநலம் மிக்கதாகவும் , ஓழுக்கம் மற்றும் பண்பாடு அற்றதாகவும் 'நான் மட்டுமே ..' என்ற எண்ணம் கொண்டதாகவும்  
,காட்டிக்கொடுக்கும் சமுதாயமாகவும், இருக்கும் என்பதை இந்த சம்பவம் உணர்த்தி நிற்கிறது ..

ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட நபிமார்கள் அல்லாஹு த ஆலாவினால் அனுப்பப்பட்ட போதும் நமக்கு படிப்பினை   தரக்கூடிய சில நபி மார்களின் வரலாறுகளையும் படிப்பினைகளையும் மாத்திரமே புனித அல் குர் ஆணில் அல்லாஹ் கூறியுள்ளான். இந்த சம்பவத்திலும் பல படிப்பினைகள்  இருக்கின்றன.

கடந்த சில தசாப்தங்களாக சம கால   முஸ்லீம் சமூகம் , மூலை முடுக்கெங்கும்  அடக்கு முறைகளுக்கு ஆளாகி வருகின்றது . எங்கும் பயங்கரவாதம் என்ற பெயர் ஊடாக  அடக்கு முறைகளுக்கு உள்ளாகி வருகின்றது ..இப்போது நாம் குற்றம் இல்லாமல் மன்னிப்பு கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

சுதந்திரங்கள் பறிக்கபட்டுக்கொண்டு இருக்கிறோம் .முஸ்லீம் என்ற அடையாளம் வெளிப்படுத்த அச்சப்படுத்தப்பட்டுக்  கொண்டிருக்கிறோம் ...

அல்லாஹ் நம்மை காப்பாற்ற வேண்டும் இதே நிலை தொடருமாக இருந்தால்  இதே அடக்குமுறைகள் தொடருமாக இருந்தால், நாம் சுயநலம் கொண்ட , ஓழுக்கம் மற்றும் பண்பாடு அற்ற 'நான் மட்டுமே ..' என்ற எண்ணம் கொண்ட  , நியாயமற்ற  குற்றச்சாட்டுகளுக்காக  மன்னிப்பை கேட்கும் சமுதாயமாக, காட்டிக்கொடுக்கும் சமுதாயமாக மாறி விடும் எல்லைக்கு தள்ளப்படலாம் ..

யா அல்லாஹ் ..
காபிர்களின் அடக்கு முறைகளில் இருந்தும் ,காபிர்களின் நெருக்குதல்களில் இருந்தும் எம்மை பாதுகாப்பாயாக ...

No comments

Powered by Blogger.