Header Ads



'பராசக்தி' பாணியில் மகிந்த பேசுகிறார்...!!


-MOHAMED NIZOUS-

மகனுக்காக நீதிமன்றம் சென்ற அப்பச்சி 'பராசக்தி' பாணியில் பேசுகிறார்.

நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளை சந்தித்திருகின்றது.
புதுமையான பல மனிதர்களை கண்டிருகின்றது.

வாழ்க்கை பாதையிலே சர்வ பலத்துடன் அசாதாரணமாக இருந்தவன் நான்.

அளுத்கமயில் குழப்பம் விழைவித்தேன். அவர்கள் கூடாதென்பதற்காக அல்ல.
அப்படி செய்யும்படி என்னை ஒரு  ஞானம்  உசுப்பேத்தி விட்டது.

இந்த குற்றவாளியின் வாழ்க்கை பாதையிலே கொஞ்ச தூரம் பின்னோக்கி நடந்து பார்த்தால் அவன் ஆடிய ஆட்டம் எவ்வளவு என்று தெரியும

மோசடி வழக்கிலே ஈடுபட்டு  விளக்க மறியலில் இருக்கிறானே என் மகன்.
இவன் வலையிலே விழுந்தவர்கள் பலர்.

அதிகாரத்தைப் பறி கொடுத்தேன்.
பதவிப் பசியால் திரிகிறேன்.
கடைசியில் பைத்தியமாக மாறப் போகிறேன்.

காண வந்த மகனை கண்டேன் கம்பிக்குப் பின்னால்
ஆம்.
கைதியாக.
மகனின் பெயரோ
யோசித்து வைத்த பெயர்.
ஆனால் மூளையில் யோசனை இல்லை.
செழித்து வாழ்ந்த குடும்பம் சீரழிந்து விட்டது.

மேக்கப் இல்லை
கண்ணிலே நீர்.
அம்மணி அலைகிறாள்
அம்மணியுடன் நானும் அலைகிறேன்.

லம்போகினியை என் மகன் விரட்டினான்.
வியந்து ஓடினான்.
பணம் என் பங்கரிலே குவிந்தது.
வெளி நாட்டிலும் ஓடினான்.
அடியாட்களை வைத்து அப்பாவியைப் 'போட்டு' விட்டு ஓடினான்.
ஓடினான்
ஓடினான்.
அதிகாரத்தின் உச்சத்திற்கே ஓடினான்.
அந்த ஓட்டத்தை தடுத்திருக்க வேண்டும்.
வாட்டத்தை போக்கியிருக்க வேண்டும்.
இன்று சட்டத்தை நீட்டுவோர்.
செய்தார்களா.
செய்ய விட்டேனா

இது யார் வழக்கும் இல்லை.
இதுவும் என் வழக்குதான்.
என் மகனின் வழக்கு.

கல்யாணத்துக்காக கொலை செய்தது ஒரு குற்றம்.

தொலைக் காட்சி செனல் ஒரு குற்றம்.
இத்தனை குற்றங்களுக்கும் காரணம் யார்?
யார்?
யார் காரணம்?
மகனை வஞ்சிக்கு பின்னால்  அலையவிட்டது யார் குற்றம்.
சதியின் குற்றமா? 
அல்லது சதியை சொல்லி சாதிக்க நினைக்கும் என் மதியின் குற்றமா?

பணம் பறிக்கும் கொள்ளைக்கூட்டத்தை வளர விட்டது யார் குற்றம்?

பஞ்சத்தின் குற்றமா? அல்லது பஞ்சத்தைக் காட்டி பணம் உழைத்த தம்பிமாரின் குற்றமா?

கடவுள் பெயரால் சாதி வெறி பேசும் நடத்தும் போலி ஞானங்களை நாட்டிலே நடமாட விட்டது யார் குற்றம்?

கடவுளின் குற்றமா? அல்லது கடவுள் பெயரை சொல்லி காலஷேபம் நடத்தும் கயவர்கள் குற்றமா?

இந்த குற்றங்கள் களையப்படும் வரை ஞானங்களும் சேனாக்களும் குறைய போவதில்லை.

இதுதான் எங்கள் வாழ்கை ஏட்டில் எந்தப்பக்கம் புரட்டினாலும் காணப்படும் பாடம்.

7 comments:

  1. இந்த நாட்டு மக்கள் செய்த குற்றமையா இது....

    ReplyDelete
  2. ithu enna madaththanam

    ReplyDelete
  3. நல்லா இருக்கு ஆனாலும் இதை ஜ முஸ்லிம் தளத்துக்கு பொருத்தமற்றது,
    காலம் ஒரு நாள் மாறலாம்

    ReplyDelete
  4. All that you did was wrong except demolished of Terrorism.

    ReplyDelete
  5. Hello Mohamed Khalid Sharif.
    Can you please remove your logo. You should not use this. Do not insult Islam. Thanks

    ReplyDelete
  6. Bro. Mohamed Khalid Sharif, Yes, Nowfara is correct. It is better change your logo.

    ReplyDelete
  7. Bro. Mohamed Khalid Sharif, Yes, Nowfara is correct. It is better change your logo.

    ReplyDelete

Powered by Blogger.