யோசிதவுக்காக கண்ணீர் வடிக்கும் பிரதி அமைச்சர்கள், பதவியை இராஜினாமா செய்யமுடியும்
யோசித ராஜபக்ச கைது செய்யப்பட்டமைக்காக கண்ணீர் வடிக்கும் பிரதி அமைச்சர்கள் பதவியை இராஜினாமா செய்ய முடியும் என அமைச்சரும் அவைத் தலைவருமான லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
உயர்கல்வி அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்…
முக்கிய பிரபு ஒருவரின் மகன் கைதானமையை தாங்கிக் கொள்ள முடியாத பிரதி அமைச்சர்கள் பதவியை இராஜினாமா செய்ய முடியும் எனவும் அதற்கு தடையில்லை.
பதவி விலகப் போவதாக கூறி தொடர்ந்தும் ஊடக கண்காட்சி நடத்த வேண்டியதில்லை. பதவி விலக விரும்புவோர் தங்களது பெயர்களை உடனடியாக வெளியிட வேண்டும்.
நல்லாட்சி அரசாங்கத்தில் சட்டம் அனைவருக்கும் சமமானது. யாரேனும் சட்டத்தை மீறினால் தராதரம் பாராது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
நாட்டின் அனைத்துப் பிரஜைகளும் சட்டத்தின் முன் சமமானவர்கள் என லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

சட்டம் சமமாக செயற்பட ஆரம்பித்திருப்பதுதான் அந்தப் பிரதியமைச்சர்களின் பீதியே!
ReplyDeleteWell said and done.Keep going on regardless of what the others say..
ReplyDeleteசபாஷ் சரியான பதிலடி
ReplyDelete