Header Ads



ஆணாக இருந்தும் பெண் வேடமிட்டு, பேஸ்புக்கில் சுற்றும் அற்பர்களும் காமுகர்களும்..!!

~ அ(z)ஸ்ஹான் ஹனீபா ~

வளர்ந்து வரும் இந் நவீன உலகில் சமூக வலைத் தளங்களும் , மென்பொருள்களும் இறியமையாத ஒன்றாக மாறிவிட்டன . அந்த வகையில் இன்று எம்மத்தியில் பத்து பேருக்கு எட்டுப் பேர் முகநூலை பயன்படுத்தும் நிலை உருவாகிவிட்டது . இம் முகநூலை  அதிகமானோர் நல்லவற்றை பதிவதற்கும் பகிர்வதற்கும் அறிவதற்கும் உபயோகிக்கின்றனர் , எனினும் ஒரு சில மக்கள் நோக்கம் தவறி இறைவன் அருளிய அருட்கொடையை உதாசீனம் செய்வது போன்று இதனையும் தீய வழிகளில் பயன்படுத்தி தாமும் வழிகெட்டு மற்றவர்களையும் வழிகெடுக்கின்றனர் . இவ்வாறான கயவர்களின் செயற்களை சுட்டிக் காட்டி முகநூல் பாவனையாளர்களை விளிப்பூட்டும் நோக்கில் இது எழுதப்பட்டது . 

இன்று உறுதியான கொள்கை , இஸ்லாத்தின் சரியான போக்கில் வாழ்க்கையைக் கொண்டு சென்று கொண்டிருக்கும் ஒருவரை திசை திருப்பி அவரின் இரகஷியங்கள் , பலவீனங்கள் போன்றவற்றை சமூக வளைத் தளங்களின் மூலமாக குறிப்பாக முகநூலில் போலி பெயரில் இருந்து கொண்டு அறிந்து அந்த நேரிய வழியில் செல்லும் நபரை வழிகெடுப்பதற்காக ஒரு சில அற்பக் கயவர்கள் முயற்சிக்கின்றனர் .

போலி பெண் பெயரில் முகநூல் கணக்கைத் திறந்து மற்றவனுடன் உரையாடி இரகஷியங்களைத் திரட்டும் நடவடிக்கையில் ஒரு கேடுகெட்ட குழுவும் வலம் வருகின்றது .

அதிலும் நாம் எவரையாவது விமர்சித்தால் அல்லது கருத்து முரண்பாடு முன்னர் நிகழ்ந்திருந்தால் அதனை பலிவாங்கும் நோக்கில் , பாதிக்கப்பட்ட குறித்தவர்கள் இந்த கீழ்த் தரமான செயலைச் செய்வதற்கு இறங்கி நேரத்தை வீணடித்து மற்றவனின் வாழ்க்கையையும் பாலாக்கி விடுகின்றனர் .

ஷீஆக்கள் தற்காலத்தில் பேச இயலாது போனால் அவர்கள்  ஆதாரங்கள் இன்றி தவிக்கும் வேளையில் இவ்வாறான யுக்திகளையே கையாளுகின்றனர், சில குள்ள நரி புத்தியுள்ள துரோகம் நினைக்கும் நண்பர்களும் தமது நண்பனை வீழ்த்த இவை போன்ற இழிவான செயலை செய்ய முயற்சித்து இறுதியில் கையும் களவுமாக பிடிபட்டுவிடுகின்றனர் . இன்னுமொரு காமுகக் கூட்டம் அதிகமாக முகநூலை நடிகை ,  நடிகர்களின் புகைப்படத்தை முன் படமாக பதிவேற்றி தமது மாய வலையில் சிக்க வைப்பதற்காக பெண்களின் பெயர்களில் இருக்கும் முகநூல் கணக்குகளுடன் தொடர்பு கொண்டு உரையாடி பழகி அப்பெண்களின் வாழ்க்கையை சீரழித்து விடுகின்றனர் .

சில பெண்கள் முன்னர் அறிமுகமில்லாத ஒருவருடன் இம் முகநூலின் மூலம் பழகி இறுதியில் தமது முழு இரகஷியங்களையும் அந்தக் காமுகனை நம்பி சொல்லி விட அவன் அனைத்து தரவுகளையும் திரட்டியதும் பயமுறுத்தி பணம் சம்பாதித்து அப் பெண்களின் வாழ்க்கையையும் சீரழித்து சந்தோஷம் காண்கின்றான் . 

முகநூல் பாவனையாளர்கள் இது குறித்து விளிப்பாக இருத்தல் மிக மிக அவசியம் , இங்கு ஒரு சந்தோஷத்திற்காக உடன் பதிவேற்றம் செய்யப்படும் புகைப்படங்கள் ஒரு நாள் எமக்கு ஏதோ ஒரு வகையில் விளைவைக் கொண்டு வந்து சேர்க்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை . தொழில்நுட்பம் , இணையம் முன்னேற்றம் அடைந்த காலத்தில் இருப்பதால் அசலை போலியாகவும் போலியை அசலாகவும் மாற்றும் அறிவு அதிகமானோருக்கு இன்று இருக்கின்றது , ஆகையால் இவ்விடயத்தில் மிகுந்த கவனம் செலுத்தப்படுவது சாலச் சிறந்தது .

வெளியில் செல்லும் சந்தர்ப்பத்தில் பெண்கள் வீட்டில் இருப்பத்தைப் போன்றன்றி உடல் முழுவதும் மறைக்க பணிக்கப் பட்டிருக்கும் பொழுது , பாதுகாப்பற்ற நம்பிக்கையற்ற கோடிக் கணக்கானோர் சுற்றும் இந்த முகபுத்தகத்தில் எவ்வாறு இவர்கள் தமது அரை குறையான , இறுக்கமான ஆடை அணிந்த புகப்படங்களை பதிவேற்றுகிறார்கள் ? எந்த நம்பிக்கையில் இச் செயலை செய்கின்றனர் ? 

இன்றைய காலத்தில் ஒருவரை நல்லவர் தீயவர் என யூகிக அணுமானிக்க இந்த முகநூல் உதவுகின்றது எனில் உலகில் பெரும்பான்மையினர் இதனை பயன்படுத்துகின்றனர் என்பதே உண்மை . ஆனால் மறு பக்கத்தில் பார்க்கின்ற பொழுது நந் நோக்கத்திற்கும் அதிகமானோர் இம் முகப் புத்தகத்தை உபயோகிக்கின்றனர் என்பதும் மறுப்பதற்கில்லை .

Friend request வருகின்ற சந்தர்ப்பத்தில் நிதானமாக யோசித்து request அனுப்பியவரின் பதிவுகளை துள்ளியமாக அவதானித்த பின்னர் ஏற்றுக் கொள்வதா அல்லது மறுப்பதா என்பதை முடிவெடுக்க வேண்டும் , இல்லையேல் வரும் அனைத்து வேண்டுதல்களையும் ஏற்றுக் கொண்டால் இறுதியில் கைசேதப் படுவது நாமாகத் தான் இருக்க முடியும்.

முகநூலும் கத்தியைப் போன்றது நல்லவற்றிற்கும் உபயோகிக்கலாம் , தீயவற்றிற்கும் உபயோகிக்கலாம் , நல்லவற்றில் பயன்படுத்தும் பொழுது அதன் முடிவும் நல்லதாகவும் ஆன்மீக நன்மையும் பயக்கும் , ஆனால் தீயவற்றில் பயன்படுத்தினால் அதன் விளைவும் தீயதாகத் தான் அமையும் , ஆக தீயவர்களை காமுகர்களை இனம் கண்டு தவிர்ந்து ஒதுங்கி நல்லவர்களுடன் இம் முகநூலில் நட்புக் கொண்டு பெண்களின் புகைப்படங்களையும் , ஆபாச விடயங்களையும் இயன்றளவு பதிவேற்றுவதை விட்டும் தவிர்ந்து நன்மை பயக்கும் கருமங்களில் இதனை பயன்படுத்த முயல்வோம் .

4 comments:

  1. அனைத்து இலத்திரனியல் ஊடகங்களிலும் நல்லது கெட்டதுகள் இருக்கின்றன. அதைப்போலவேதான் முகநூலும்!
    இந்த வசதியை (உங்கள் பாணியில் கூறினால் அருட்கொடையை)கிறுக்குத்தனமாகப் பயன்படுத்துபவர்களும் பலவீனர்களும்தான் இங்கு கைசேதப்படுகின்றார்கள்.

    சிறு தகவல் : பேஃஸ் புக் சமூகவலைத்தளம்
    மார்க் சக்கர்பர்க் எனும் ஒரு யூதருடைய அருட்கொடை

    ReplyDelete
  2. Kaththi paawaththey thoondadu. Facebook,youtube paawaththin pakkam thallakkoodiyadu.

    ReplyDelete
  3. பெண்கள் தான் இதில் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். Some get fooled by fake webcams , some get fooled by voice changers. Either don't use Facebook or don't trust anyone until you see them in real ( not even on cam or phone ) .
    These days it's better to tell the kids what' are goods and bads in social media rather than completely stopping them. Because even if u stop them at home they may find other places where they can use and fall victims.

    ReplyDelete
  4. மார்க்கத்தினை கற்றுக்கொள்ள எத்தனையோ வழிமுறைகள் இருந்தும் facebook போன்ர இன்னோரன்ன இனையத்தில் நாங்கள் மார்க்க விடயங்களையே கற்றுக்கொள்கின்ரோம் என்றால் அது பொய் காரனம் நல்ல விடயம் ஒன்ரை பார்க்கவோ கேட்கவோ முற்படும் போது பக்கமாக செய்தானைப் போன்று ஈமானை மாற்றும் எதாவது ஒன்ரு வந்து கொண்டே இருக்கும்....

    ReplyDelete

Powered by Blogger.