அரசின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு, பொதுமக்கள் ஆலோசனை வழங்கலாம்
இலங்கை வெளிவிகார அமைச்சின் எற்பாட்டில் இலங்கை மக்களின் நல்லிணக்கப் பொறிமுறைகளின் செயற்பாடுகளுக்கு ஆலோசனை பெறுவதற்கான இணையத்தளம் அங்குராப்பணம் செய்யும் நிகழ்வு இன்று உத்தியபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை இந்த அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெற்றது.
வெளிவிகார அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹொட்டியாரட்சி ஆகியோர் தலைமையில் இணையத்தளம் அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
WWW.SCRM.GOV.lk என்ற இணையத்தளம் ஊடாக மக்கள் பல பாகங்களில் இருந்தும் மூன்று மொழிகளிலும் இலங்கை நாட்டின் நல்லிணக்கப் பொறிமுறைகளின் செயற்பாடுகளுக்கு ஆலோசனைகளை வழங்க முடியும்.
இவ்வருடம் ஏப்ரல் மாதம் வரை இவ்இணைத்தளம் ஊடாக மக்கள் ஆலோசனைகளை வழங்க முடியும்.
இதன் இறுதி அறிக்கைகள் எதிர்வரும் மே மாதம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
இதில் தழிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன், மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்ணாண்டோ, சிவில் அமைப்பினர்கள் அரச அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Timely move.go ahead and bring reconcilliation through dialogues among ethnic groups. First and foremost the Sinhala and English newspapers should give prominance to the problems faced by minorities in this country instead of complete black out
ReplyDelete