துருக்கி தொடங்கும் போருக்கு, நாங்கள் விலை கொடுக்க தயாராக இல்லை - நேட்டோ
ரஷ்யாவுடன் ஆயுத மோதலில் ஈடுபட்டால் நேட்டோ படைகள் உதவிக்கு வராது என்று துருக்கிக்கு ஐரோப்பிய தூதர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த சில நாட்களாகவே துருக்கி மற்றும் ரஷ்யாவுக்கு இடையே மனக்கசப்பு இருந்து வருகிறது.
தங்கள் வான் எல்லையில் பறந்ததாக கூறி ரஷ்ய விமானத்தை துருக்கி சுட்டுவீழ்த்திய பிறகு இது பெரும் மோதலாக மாறியது.
இந்நிலையில் சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டுவர சர்வதேச படைகள் இணைந்து தரை வழி தாக்குதலை நடத்த துருக்கி அழைப்பு விடுத்திருந்தது.
சவூதி அரேபியாவுக்கு சர்வதேச படையில் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக அறிவித்தது.
எனினும் சிரிய அதிபர் பஷார் அல் ஆதாத்துக்கு ஆதரவாக தாக்குதல் நடத்திவரும் ரஷ்யா இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
ஒரு வேளை இந்த விவகாரத்தால் ரஷ்யாவுடன் போர் மூளும் சூழ்நிலை ஏற்பட்டால், உறுப்பு நாடுகளில் ஒன்றுக்கு ஆபத்து ஏற்பட்டால் மற்ற நாடுகள் அனைத்தும் இணைந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தின் படி நேட்டோவின் உதவியை பெறலாம் என்று துருக்கி திட்டமிட்டிருந்தது.
இந்நிலையில் லக்ஸம்பெர்க்கின் வெளிவிவர அமைச்சர் ஜீன் ஆஸ்செல்போர்ன் இது தொடர்பாக கூறுகையில், அண்மை நாட்களாக ரஷ்யா மற்றும் துருக்கிக்கு இடையில் ஏற்பட்டு வரும் மோதல் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு எதிராக ராணுவத்தை விரிவாக்கம் செய்ய நேட்டோ விரும்பவில்லை.
மேலும், உறுப்பு நாடு நேரிடையாக தாக்கப்பட்டால் மட்டுமே பிரிவு 5ன் படி மற்ற நாடுகள் உதவும் என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல் ஜேர்மனிய தூதுவர்கள் கூறுகையில், துருக்கி தொடங்கும் போருக்கு நாங்கள் விலை கொடுக்க தயாராக இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இது துருக்கிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, துருக்கி மற்றும் ரஷ்யா இடையில் போர் மூளும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே ஐரோப்பிய நாடுகளை அவற்றை தடுக்க முனைப்பு காட்டவேண்டும் என்று பிரான்ஸ் ஜனாதிபதி பிராங்கொயிஸ் ஹொல்லெண்டெ தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Post a Comment