Header Ads



இலங்கைக்கு மற்றுமொரு சர்வதேச வெற்றி - ஜெனிவாவில் வாய் திறக்காத ஹுசேன்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின்  31 ஆவது கூட்டத் தொடர் இன்ற  திங்கட்கிழமை 29 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகிய  நிலையில் முதலாவது அமர்வின்போது  உரையாற்றிய  ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் இலங்கைக்கு  மேற்கொண்ட விஜயம் தொடர்பில் எந்த விடயத்தையும் குறிப்பிடவில்லை.

செய்ட் அல் ஹுசேன் தனது நீண்ட உரையில் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயம் தொடர்பாகவும்  இலங்கையின் மனித உரிமை நிலை குறித்தும்   இலங்கை  குறுகிய விளக்கத்தை  அளிப்பார் எனவும் எதிர்பார்க்கப்பட்டபோதும் அவர் எதனையும் குறிப்பிடவில்லை. 

மார்ச் மாதம் 24 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 31 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பாக விவாதம் நடத்துவதற்கு எந்தவொரு தினமும் நிகழ்ச்சி நிரழ் அட்டவணையில் ஒதுக்கப்படவில்லை.

இம்மாதத்தின் ஆரம்ப பகுதியில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து  மதிப்பீடு செய்திருந்தார்.  தனது விஜயத்தை முடித்துக்கொண்டு கருத்து  வெளியிட்டிருந்த  ஹுசென்  வெளிநாட்டு நீதிபதிகள்  தொடர்பில் தீர்மானம் எடுப்பது இலங்கையின்  இறைமை தொடர்பான முடிவாகும் என்று குறிப்பிட்டிருந்தார்.

No comments

Powered by Blogger.