Header Ads



பிரதமர் ரணிலுக்கு, அஸ்வர் அனுப்பிவைத்துள்ள கடிதம்

(எம்.எஸ்.எம்.சாஹிர்)

அரசாங்க பாடசாலைகளில் நிலவும் கணித, விஞ்ஞான, ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எடுத்துள்ள நடவடிக்கையை வரவேற்றுள்ள முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.அஸ்வர் இதேபோன்று மௌலவி ஆசிரியர் வெற்றிடங்களையும் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 

நவமணியில் கடந்த செவ்வாயன்று வெளியான ஆசிரியர் நியமனம் வழங்கல் தொடர்பான பிரத்தியேக செய்தியை சுட்டிக்காட்டியே அல்-ஹாஜ் அஸ்வர் பிரதமரிடம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். 

பிரதமருக்கு அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, 

மௌலவி ஆசிரியர் நியமனங்களை மேற்கொள்ளுமாறு கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசத்திடம் நாம் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளோம். நீங்கள் நன்று அறிந்த அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாடு, அரசாங்க பாடசாலைகளில் அரபு, இஸ்லாம் போதிப்பதற்கு ஆசிரியர்கள் பற்றாக்குறையாக இருப்பது பற்றி பலமுறை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நீங்கள் கங்காராம விகாரையில் அண்மையில் உரையாற்றும் போது சரியாக குறிப்பிட்டது போன்று சகல சமூகங்களினதும் கலாசார, அபிலாஷைகள் ஊக்குவிக்கப்படல் வேண்டும். 

இந்தச் சூழலில் முஸ்லிம் மாணவர்களுக்கு அவர்களது சமயக்கல்வியை தடையின்றி தொடர்வதற்கு மௌலவி நியமனங்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்கின்றேன். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் அகில இலங்கை முஸ்லிம் மகாநாட்டின் வேண்டுகோளை, கடைசியாக அலரிமாளிகையில் நடைபெற்ற ஓர் வைபவத்தின் போது, மௌலவி ஆசிரியர் நியமனமங்களை வழங்கப்பட்டதனை நினைவுப்படுத்த வருகின்றேன். முஸ்லிம் சமூகத்தின் கல்விப்பிரச்சினைகளை முன்வைப்பதற்கு அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாடு கல்வியமைச்சரைச் சந்திப்பதற்கு அவகாசம் அளிக்குமாறு பலமுறை கோரியும் இதுவரை அவகாசம் வழங்கப்படவில்லை என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டுவருவதாகவும் பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.