சிரியாவில் மருத்துவமனை மீது, வேண்டுமென்றே விமானத் தாக்குதல்
சிரியாவில் தங்களின் ஒத்துழைப்புடன் இயங்கிவந்த மருத்துவமனை ஒன்று வேண்டுமென்றே விமானம் மூலம் தாக்கப்பட்டுள்ளதாக மருத்துவ தன்னார்வ அமைப்பான எம்எஸ்எஃப் கூறுகின்றது.
இந்தத் தாக்குதலை அடுத்து 8 பேர் காணாமல்போயுள்ளதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
அடுத்தடுத்து இரண்டு தாக்குதல்களில் நான்கு ஏவுகணைகள் மருத்துவமனையைத் தாக்கியதாக எம்எஸ்எஃப் தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதல்களில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் ரஷ்ய விமானங்களே தாக்குதலை நடத்தியுள்ளதாகவும் பிரிட்டனை தளமாகக் கொண்டு இயங்கும் சிரியாவின் மனித உரிமை நிலவரத்தை கண்காணிப்பதற்கான அமைப்பு கூறுகின்றது.
இத்லிப் மாகாணத்தில் 30 படுக்கைகளுடன் இயங்கிய இந்த மருத்துவமனையில் 50க்கும் அதிகமான பணியாளர்கள் பணியாற்றியதாக கூறப்படுகின்றது.
இந்த மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள அழிவு காரணமாக சுமார் 40 ஆயிரம் மக்களுக்கு சிகிச்சை வழங்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக எம்எஸ்எஃப் கூறுகின்றது.
Post a Comment